This Article is From Sep 28, 2019

அமெரிக்காவில் சீக்கிய போலீஸ் அதிகாரி கொடூரமான முறையில் சுட்டுக் கொலை!!

அமெரிக்காவின் டிராபிக் போலீஸ் பிரிவில் பணியாற்றினாலும், சந்தீப்புக்கு தனது கலாசாரத்தை பின்பற்றி தாடி, தலையில் தொப்பை வைக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. மறைந்த சந்தீபுக்கு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

அமெரிக்காவில் சீக்கிய போலீஸ் அதிகாரி கொடூரமான முறையில் சுட்டுக் கொலை!!

அரசு சாரா சீக்கிய தொண்டு அமைப்பில் உறுப்பினராக சந்தீப் சிங் இருந்து வந்து, பல்வேறு சேவைகளை புரிந்தார்.

Houston:

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய போலீஸ் அதிகாரி அமெரிக்காவில் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டிராபிக் போலீஸ் உயர் அதிகாரியாக பணியாற்ற வந்தவர் சந்தீப் சிங் தலிவால். அவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது சோதனைக்காக சிக்னலில் கார் ஒன்றை மறித்தார். 

அந்த காருக்குள் ஆணும், பெண்ணும் இருந்தனர். காரை மறித்து சந்தீப் சீங் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது, ஒருவர் வெளியே வந்து துப்பாக்கியால் சந்தீப்பை இரு முறை சுட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்தார். 

இதன்பின்னர், சந்தீப்பை சுட்டவர் அருகில் உள்ள ஷாப்பிங் மாலுக்குள் ஓட்டம் பிடித்தார். அவர் யார் என்கிற விவரம் சந்தீப்பின் சட்டைப் பையில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவில் பதிவாகி இருந்தது. 

இதனை சோதனையிட்ட போலீசார் குற்றவாளியின் புகைப்படத்தை போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், குற்றவாளியையும் அவருடன் வந்த பெண்ணையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி சீக்கியர் சந்தீப்புக்கு, அவரது துறையில் நல்ல பெயர் உள்ளது. மற்றவர்களுக்கு முன் உதாரணமாக அவர் இருந்தார் என உயர் அதிகாரிகளை அவரை பாராட்டியுள்ளனர். 

அமெரிக்காவின் டிராபிக் போலீஸ் பிரிவில் பணியாற்றினாலும், சந்தீப்புக்கு தனது கலாசாரத்தை பின்பற்றி தாடி, தலையில் தொப்பை வைக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. மறைந்த சந்தீபுக்கு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

அரசு சாரா சீக்கிய தொண்டு அமைப்பில் உறுப்பினராக சந்தீப் சிங் இருந்து வந்து, பல்வேறு சேவைகளை புரிந்தார். அவரது மறைவுக்கு அமெரிக்காவில் உள்ள பல இந்திய அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன. 
 

.