This Article is From Jun 11, 2020

மும்பையில் பிரபல கிராஃபோர்டு மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து!

தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு படையினருக்கு மாலை 6.15-க்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நிமிடத்தில் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தை அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் பிரபல கிராஃபோர்டு மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து!

சுமார் 10-க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பிரபல கிராஃபோர்டு மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுமார் 10-க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இன்று மாலை சரியாக 6.15-க்கு தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயணைக்கும் பணியில் ஜெட் எனப்படும் 2 ராட்சத தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக மும்பை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு படையினருக்கு மாலை 6.15-க்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நிமிடத்தில் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தை அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொது முடக்கம் காரணமாக மக்கள் வரத்து குறைவாக காணப்படுகிறது. இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

.