This Article is From Feb 28, 2019

''இந்திய விமானியை விடுவியுங்கள்'' பாகிஸ்தானிலிருந்து குரல் எழுப்பும் ஃபாத்திமா பூட்டோ

இந்திய விமானப்படையை சேர்ந்த விமானி எம்ஐஜி 21 ரக விமானத்திலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட அவர் பாகிஸ்தான் அரசால் சிறைபிடிக்கப்பட்டார்.

''இந்திய விமானியை விடுவியுங்கள்'' பாகிஸ்தானிலிருந்து குரல் எழுப்பும் ஃபாத்திமா பூட்டோ

நம் வீரர்களும், இந்திய வீரர்களும் போரில் மடிவதை விரும்பவில்லை என்று பாத்திமா பூட்டோ கூறியுள்ளார்.

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ஜுல்ஃபிகார் அலி பூட்டோவின் பேத்தி பாத்திமா பூட்டோ தற்போதைய மாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம்  பிடித்து வைத்துள்ள இந்திய விமானியை விடுவிக்க சொல்லி கோரிக்கைவிடுத்துள்ளார்.

இந்திய விமானப்படையை சேர்ந்த விமானி எம்ஐஜி 21 ரக விமானத்திலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட அவர் பாகிஸ்தான் அரசால் சிறைபிடிக்கப்பட்டார்.

அவரை பத்திரமாக ஒப்படைக்குமாறு பாகிஸ்தான் ராணுவத்துக்கு அழுத்தம் தரப்படுகிறது. 

இது குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு கருத்து தெரிவித்த ஃபாத்திமா பூட்டோ ''நானும் பல பாகிஸ்தான் இளைஞர்களும் இந்திய விமானியை இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறோம். பாகிஸ்தானில் அமைதியையும், மனிதநேயத்தையும் நிலைநாட்ட வேண்டும்" என்றார். 

மேலும், "வாழ்நாள் முழுவதையும் போரிலேயே கழித்துவிட்டோம். நம் வீரர்களும், இந்திய வீரர்களும் போரில் மடிவதை விரும்பவில்லை. நாம் துணைக்கண்டடத்தின் அநாதைகளாக இருக்க விரும்பவில்லை" என்றார்.

"இந்த தலைமுறை பாகிஸ்தானியர்கள் உரிமைக்காக பேச வேண்டும். அமைதிக்காக போராட வேண்டும்" என்றார்.

"எப்போதுமே இந்தியாவுடன் நாம் நட்பாய் இருந்து பார்த்ததில்லை. ட்விட்டரில் #saynotowar என்ற ஹேஷ்டேக்குடன் நாம் போர் செய்து கொண்டிருக்கிறோம்" என்றார். இந்த ஹேஷ்டேக் உலக அளவில் ட்விட்டரில் நம்பர் 1 ட்ரெண்டிங்கை பெற்றது. 

புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பதில் தாக்குதலை ஜெய்ஷ் இ முகமது மீது நடத்தியது. அப்போது பாகிஸ்தான் ராணுவம் இந்திய விமானியை கைது செய்தது.

.