அந்தப் புலி இடம்பெற்ற காணொலி தற்போது சீன இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
சீனாவில் சில தினங்களுக்கு முன்பு வேலையை முடித்து திரும்பும் போது சாலையில் உள்ள மிருகம் விழியை மறைத்து நின்றது. அது என்னவென்று அறிந்து கொள்ள அருகில் சென்ற சைபிரியன் விவசாயி, அது புலி என்று கண்டு அத்ர்ந்து போனார்.
இச்சம்பவம் சீனாவில் உள்ள ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஃபுயான் நகரத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று நடந்துள்ளது.
‘பார்க் யாஜூன், அரிசி சாகுபடி செய்து வரும் விவசாயி எனவும், அவர் சாலையில் இருந்த புலியை கண்டவுடன் காருக்குள் இருந்தபடியே புலியின் காணொலி காட்சிகளைப் பதிவு செய்து நண்பர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்' என்று அங்குள்ள பத்திரிகையாளர்கள் தகவல் தெரிவித்தனர்.
மேலும், இந்தச் சம்பவம் அறிந்து போலீசார் அங்கு சென்றபோது, புலி வேரிடம் சென்று விட்டது. ஆனால், அந்தப் புலி இடம்பெற்ற காணொலி தற்போது சீன இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புலி நடமாட்டம் இருப்பதால், சீன அரசு அங்கு வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்புலியின் கால்தடத்தை வைத்து அது ஒரு ஆண் சைபிரிய புலி இனத்தைச் சேர்ந்தது எனவும், அது ரஷ்யாவில் இருந்து சீனாவுக்கு வந்திருக்க வாய்ப்புள்ளது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
கடந்தாண்டு, சீனாவைச் சேர்ந்த ஒருவர் கூண்டில் இருந்த புலிக்கு பணக்கட்டை கொடுத்தபோது அந்நபரின் இரண்டு விரல்களை அந்த புலி தின்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Click for more
trending news