This Article is From Sep 19, 2018

போலி சான்றிதழ் மோசடி: டில்லி பல்கலை மாணவர் தலைவர் மீது புகார்

டில்லி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தல் நடைப்பெற்றது இதில், தலைவர் பதவிக்கு ஏபிவிபி சார்பில் போட்டியிட்ட அங்கிவ் பசோயா வெற்றி பெற்றார்.

டில்லி பல்கலை மாணவர் தலைவர் அங்கிவ் பசோயா மீது புகார்

Chennai:

டில்லி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தல் நடைப்பெற்றது இதில், தலைவர், துணைத்தலைவர், இணைச்செயலாளர் ஆகிய முக்கிய பொறுப்புகளை பாஜகவை சார்ந்த மாணவர் அமைப்பான ஏபிவிபி வென்றது. செயலாளர் பொறுப்பை காங்கிரசின் மாணவர் அமைப்பு வென்றது.

பொதுத் தேர்தல்களில் நடத்தப்படுவது போலவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்டன. இதில், தலைவர் பதவிக்கு ஏபிவிபி சார்பில் போட்டியிட்ட அங்கிவ் பசோயா வெற்றி பெற்றார்.

இந்நிலையில், தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக கூறி காங்கிரஸ் மாணவர் அமைப்பு டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தற்போது, மேலும் ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

sl3eaof4

சமர்ப்பிக்கப்பட்ட போலி சான்றிதழ்

தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏபிவிபியின் அங்கிவ் பசோயா, தமிழகத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பிஏ படித்ததாக மோசடி செய்து டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ இணைந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. எனவே, போலியான சான்றிதழை கொடுத்து டெல்லி பல்கலைக்கழகத்தில் அங்கிவ் சேர்ந்ததாக காங்கிரஸ் மாணவர் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

சான்றிதழின் எண்ணை பல்கலைக்கழகத்தில் கொடுத்து விசாரித்ததில், அது போலியானது என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த குற்றச்சாட்டை ஏபிவிபி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

.