Around 20 men carrying sticks and iron roads entered JNU on Sunday.
New Delhi: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவரொருவர் ஏபிவிபி வன்முறை கும்பலிடமிருந்து எப்படி தப்பினேன் என்பதை விவரித்துள்ளார்.
ஸ்கூல் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்டடீஸ் மாணவர் ராஜேஸ் குமார் ஆர்யா என்ற மாணவர் இதனை காங்கிரஸின் உண்மையறியும் குழுவிடம் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு உருட்டுக்கட்டை, இரும்புக் கம்பிகளுடன் முகத்தை மறைந்தபடி வன்முறைக்கும்பல் ஒன்று ஜே.என்.யுக்குள் நுழைந்தது. இக்கும்பல் ஆசிரியர்களையும் மாணவர்களையும் கடுமையாக தாக்கியது.
வன்முறைக்கும்பல் ராஜேஸ்குமார் ஆர்யாவின் அறைக்கு வந்துள்ளது. அப்போது கைகால்களை முடக்கி அறையின் மூளைக்கு தள்ளியது. அப்போது ராஜேஸ்குமார் தானும் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவன் என்று கூறியது அமைப்பில் உள்ளவர்களின் பெயர்களை சொல்லுமாறு கூறியுள்ளனர். பெயர்களை கூறியும் நம்பாமல் ஏபிவிபியை சார்ந்தவன் என்பதற்கு என்ன சாட்சி என்று கேட்கவும் தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை காட்டியுள்ளார். “இந்து -தேசியம் :வாசிப்பு” என்று புத்தகத்தை காட்டியதும் மேற்கொண்டு தாக்காமல் கும்பல் அறையை விட்டு வெளியேறியதாக ராஜேஸ்குமார் கூறுகிறார்.
காங்கிரஸின் உண்மையறியும் குழுவின் செய்தித் தொடர்பாளர் சுஷ்மிதா தேவ் ஆசிரியர்களையும் மாணவர்களையும் சந்தித்தாகக் கூறினர்.