This Article is From May 15, 2019

அத்வானி கண்ணீர் சிந்தினாரே தவிர என்னை போகாதே என்று சொல்லவில்லை : சத்ருகன் சின்ஹா

“எங்கள் கெளரவமிக்க பிரதம் துப்பாக்கி சூடு மற்றூம் சூதாட்ட கொள்கையை நம்புகிறார். நாம் வேலைவாய்ப்பு பற்றி கேட்கும் போது புல்வாமா தாக்குதல் பற்றி பேசுகிறார். மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கேள்விகளுக்கு அவர் ஏன் பதிலளிக்கவில்லை”

மோடி மூட்டை கட்டும் காலம் வந்து விட்டது -சத்ருகன் சின்ஹா

Patna:

பாஜகவுடன் 20 ஆண்டுகளாக இணைந்திருந்த நடிகரும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹா (Shatrughan Sinha) இந்த ஆண்டு காங்கிரஸுடன் இணைந்துள்ளார். சத்ருகன் சின்ஹா NDTVக்கு கொடுத்த பிரத்யேக பேட்டியில் “சரியான மற்றும் சிறந்த திசையில்”செல்வதாக கூறினார். 

பாஜகவின் நீண்டகால அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவரான எல்கே அத்வானியின் (LK Advani) ஆசிர்வாதம் தனக்கு உண்டு என்றும் கூறுகிறார். “நான் புதிய திசையில் பயணிக்கத் தொடங்கும் போது அத்வானியின் ஆசிர்வாதங்களை நான் பெற்றேன். கிட்டத்தட்ட கண்ணீருடன் ‘சரி'என்றுதான் சொன்னார். ‘போகாதே'என்று என்னை தடுத்து நிறுத்தவில்லை என்று NDTV பிரணாராயுடன் பகிர்ந்து கொண்டார். 

அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் இருந்தபோது கட்சியில் ஜனநாயகம் இருந்தது. தற்போது சர்வாதிகாரம் மட்டுமே உள்ளது. தற்போது பாஜகவில் மூத்த தலைவர்களை முறையாக நடத்துவதில்லை என்று தெரிவித்தார்.

பாஜகவின் நிறுவனர்களின் உறுப்பினரான எல்.கே.அத்வானி பாஜக வேட்பாளர்களில் இருந்து நீக்கப்பட்டார். காந்திநகர் தொகுதியில் பாஜகவின் தலைவரான அமித் ஷா போட்டியிடுகிறார். கட்சியில் பெரிய தலைவர்கள் யாரும் தன்னை தொடர்பு கொள்ளவில்லை என்று பாஜகவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜக அதன் மூத்த தலைவர்களை நடத்தும் முறையை காங்கிரஸ் விமர்சனம் செய்தது. சின்ஹா கடந்த இரண்டு ஆண்டுகளாக மோடி தலைமையிலான அரசை விமர்சித்து வருகிறார். 

பாலகோட் தாக்குதல் இந்த தேர்தலில் வித்தியாசத்தை ஏற்படுத்துமா என்று கேட்டதற்கு “ஒவ்வொரு இந்தியரும் தேசியவாதிதான்” என்று கூறினார்.

தேசியவாத பிரச்னையை உயர்த்துவதன் மூலம் பிரதமர் மோடி மட்டுமே கேள்விகளைக் கேட்கிறார். “எங்கள் கெளரவமிக்க பிரதம் துப்பாக்கி சூடு மற்றூம் சூதாட்ட கொள்கையை நம்புகிறார். நாம் வேலைவாய்ப்பு பற்றி கேட்கும் போது புல்வாமா தாக்குதல் பற்றி பேசுகிறார். மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கேள்விகளுக்கு அவர் ஏன் பதிலளிக்கவில்லை” என்றார்.

மே 23க்குப் பிறகு பிரதமர் பதவி வகிக்க மாட்டார் என்று எங்கள் இரும்பு பெண்மணி மம்தா பானர்ஜி சரியாகச் சொன்னார். பிரதமரின் காலாவதி காலம் நெருங்கி விட்டது. மோடி மூட்டை கட்டும் காலம் வந்து விட்டது என்று சத்ருகன் சின்ஹா தெரிவித்தார். 

.