This Article is From Aug 07, 2018

காப்பகத்தில் இருந்து தப்பித்து, இசைத் திருவிழாவில் கலந்து கொண்ட முதியோர்கள்!

ஜெர்மனி டித்மார்சர் பகுதியில், காணாமல் போன இரண்டு முதயவர்கள், வாக்கன் ஓபன் ஏர் இசைத் திருவிழாவில் கண்டறியப்பட்டுள்ளனர்.

காப்பகத்தில் இருந்து தப்பித்து, இசைத் திருவிழாவில் கலந்து கொண்ட முதியோர்கள்!

ஜெர்மனி டித்மார்சர் பகுதியில், காணாமல் போன இரண்டு முதயவர்கள், வாக்கன் ஓபன் ஏர் இசைத் திருவிழாவில் கண்டறியப்பட்டுள்ளனர்.

ஜெர்மனியில் உள்ள முதியோர் காப்பகத்தில் இருந்து தப்பித்த இரண்டு முதயவர்கள், 25 மைல்கள் பயணம் செய்து இசைத் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். நடைப்பயணமாகவும், பொது போக்குவரத்து பயன்படுத்தியும் ஹெவி மெட்டல் இசைத் திருவிழாவிற்கு முதியோர்கள் சென்றுள்ளனர்

முதியோர்கள் காணவில்லை என்று காப்பக அதிகாரிகள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து, தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு வாக்கன் திருவிழாவில் இரண்டு முதியோர்கள் சோர்வான நிலையில் மீட்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது

எனவே, திருவிழாவிற்கு சென்ற டித்மார்சர் காவல் துறையினர், முதியோர்களை மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர், முதியோர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு நடைப்பெற்ற வாக்கன் ஓபன் ஏர் திருவிழாவிற்கு, 75,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். திருவிழாவில் கலந்து கொண்ட முதியோர்களின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.