This Article is From Jun 19, 2020

மசூதிக்குள் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் உட்பட எட்டு பேர் உயிரிழப்பு! பாதுகாப்புப்படை அதிரடி!!

இந்நிலையில் மசூதியில் அடைக்கலம் புகுந்த இரண்டு பயங்கரவாதிகளை அங்கிருந்து வெளியேற்ற பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை மட்டுமே பயன்படுத்தினர் என காஷ்மீர் காவல் ஆய்வாளர் விஜய் குமார் தெரிவித்தார்.

மசூதிக்குள் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் உட்பட எட்டு பேர் உயிரிழப்பு! பாதுகாப்புப்படை அதிரடி!!

மசூதியில் அடைக்கலம் புகுந்த இரண்டு பயங்கரவாதிகளை அங்கிருந்து வெளியேற்ற பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை மட்டுமே பயன்படுத்தினர்

ஹைலைட்ஸ்

  • ஷோபியன் மற்றும் பாம்பூரில் நடந்த மோதல்களில் 8 பயங்கரவாதிகள் உயிரிழப்பு
  • துப்பாக்கியை பயன்படுத்தாமல் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர்
  • இரு பயங்கரவாதிகள் அருகிலுள்ள மசூதிக்குள் அடைக்கலம் புகுந்தனர்
Srinagar:

நாடு முழுவதும் சீன மற்றும் இந்திய ராணுவ வீரர்களின் மோதல் குறித்து விவாதித்துக்கொண்டிருக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் ஜம்மு-காஷ்மீரில் ஷோபியன் மற்றும் பாம்பூரில் நடந்த இரண்டு மோதல்களில் எட்டு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதில், பாம்பூர் பகுதியில் நடந்த மோதலில் மசூதிக்குள் இருந்த இரு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் வெளியேற்றினர். இந்த நடவடிக்கையில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை பயன்படுத்தாமல் வெறும் கண்ணீர் புகை குண்டுகளை மட்டுமே பயன்படுத்தியதாக ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதிகள் இருப்பதைப் பற்றிய குறிப்பிட்ட தகவல்களைப் பெற்ற பின்னர் பாதுகாப்புப் படையினர் நேற்று காலை ஷோபியன் மற்றும் பாம்பூர் பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கினர். ஷோபியனில் ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், மூன்று பேர் பாம்பூரில் கொல்லப்பட்டனர்.

முன்னதாக புல்வாமா மாவட்டத்தில் பம்பூரில் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். ஆனால் மேலும் இருவர் அருகிலுள்ள மசூதிக்குள் அடைக்கலம் புகுந்தனர் என அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் மசூதியில் அடைக்கலம் புகுந்த இரண்டு பயங்கரவாதிகளை அங்கிருந்து வெளியேற்ற பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை மட்டுமே பயன்படுத்தினர் என காஷ்மீர் காவல் ஆய்வாளர் விஜய் குமார் தெரிவித்தார்.

“பொறுமையாகவும், மதத்தின் புனிதத்தன்மையை சீர்குலைக்காமலும், துப்பாக்கி மற்றும் வெடி குண்டுகளை பயன்படுத்தாமல் வெறும் கண்ணீர் புகை குண்டுகளை மட்டுமே பயன்படுத்தினோம். பின்னர் அந்த இரு பயங்கரவாதிகள் வெளியேற்றப்பட்டனர்.“ என ஐ.ஜி.பி கூறினார்.

காவல்துறையினர், இராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்களின் இந்த பொறுப்புணர்ச்சியை உள்ளூர் மக்களும், மஸ்ஜித் குழுவும் பெரிதும் பாராட்டியுள்ளனர். மாவட்ட காவல்துறை தலைவர் தாஹிருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

 ஜம்மு-காஷ்மீரில் கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு டஜன் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட இந்த பயங்கரவாதிகள் அனைவரும் உள்ளூர்வாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.