This Article is From May 08, 2019

தமிழகத்தில் 'ப்ளஸ் ஒன்' தேர்வு முடிவுகள் வெளியானது!!

தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணைய தளங்களான tnresults.nic.in மற்றும் dge.tn.nic.in ஆகியவற்றில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் 'ப்ளஸ் ஒன்' தேர்வு முடிவுகள் வெளியானது!!

Tamil Nadu +1 Result: இன்று காலை 9.30 க்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

New Delhi:

தமிழகத்தில் ப்ளஸ் ஒன் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. +2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்று +1 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

காலை சரியாக 9.30-க்கு +1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை  அதிகாரப்பூர்வ இணைய தளங்களான tnresults.nic.in மற்றும்  dge.tn.nic.in ஆகியவற்றில் தெரிந்து கொள்ளலாம். 

கடந்த ஆண்டை விடவும் 23 நாட்கள் முன்கூட்டியே இந்த ஆண்டு +1 தேர்வு முடிவுகள் வெளியாகினது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை பதிவு எண், பிறந்த நாள் ஆகியவற்றை பயன்படுத்தி மதிப்பெண் பட்டியலை இணைய தளத்தின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

ஒரிஜினல் மதிப்பெண் பட்டியல், ரிசல்ட் வந்த உடனேயே பள்ளிகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். 

தமிழகத்தில் நடப்பாண்டில் +2 தேர்ச்சி சதவீதம் 91.3- ஆகவும், 10-ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் 95.2- ஆகவும் உள்ளது. 

ப்ளஸ் ஒன் தேர்வு தேர்வு முடிவுகளை எப்படி டவுண்லோட் செய்யலாம்?

* முதலில் tnresults.nic.in அல்லது  dge.tn.nic.in இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்
* +1 ரிசல்ட்டுக்கான லிங்க் அங்கு இருக்கும். அதனை க்ளிக் செய்ய வேண்டும். 
* ஓபன் ஆகும் பக்கத்தில் பதிவு எண், மற்ற விவரங்களை குறிப்பிடவேண்டும். 
* இதன்பின்னர் இன்னொரு பக்கத்தில் மதிப்பெண் பட்டியல் வெளியாகும். அதனை டவுண்லோட் செய்து கொள்ளலாம். 

Click here for more Education News 

.