This Article is From Feb 28, 2019

ட்ரம்ப் மற்றும் கிம் வியட்நாம் சந்திப்பு தோல்வி!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பில் சிங்கப்பூர் சந்திப்பு போன்று சுமூகமாக அல்லாமல் எதிர்மறையான கருத்துகளுடன் இருநாடுகளும் சந்திப்பு தோல்வி என அறிவித்து வெளியேறின.

ட்ரம்ப் மற்றும் கிம் வியட்நாம் சந்திப்பு தோல்வி!

கிம்முக்கு அணு ஆயுத சோதனைகளை நிறுத்த சொல்வதில் இன்னமும் நிறைய சந்தேகங்கள் உள்ளது என்றார் ட்ரம்ப். 

அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையேயான ஹோனாய் சந்திப்பு தோல்வியில் முடிவடைந்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிம் மும்பு உங்கள் கோரிக்கைகளை நிராகரித்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பில் சிங்கப்பூர் சந்திப்பு போன்று சுமூகமாக அல்லாமல் எதிர்மறையான கருத்துகளுடன் இருநாடுகளும் சந்திப்பு தோல்வி என அறிவித்து வெளியேறின.

சில நேரங்களில் நாம் கட்டாயம் வெளியேறியே ஆக வேண்டும் அதுதான் வடகொரிய விஷயத்திலும் நடத்துள்ளதாக ட்ரம்ப் கூறினார்.

அவர்கள் முழுமையாக தடையை நீக்க கோரினர் அது முடியாது என மறுத்தோம் என்று ட்ரம்ப் தெரிவித்தார். வருங்காலத்தில் இது மாறலாம் என்றார்.

ஒரு விஷயத்தை வேகமாக முடிப்பதை விட சரியாக முடிப்பதே சிறந்தது. கிம்முக்கு அணு ஆயுத சோதனைகளை நிறுத்த சொல்வதில் இன்னமும் நிறைய சந்தேகங்கள் உள்ளது என்றார் ட்ரம்ப். 

அமெரிக்கா வட கொரியாவை அணு ஆயுத தளங்களை அழிக்க வேண்டும் என்றும், வடகொரியா அமெரிக்காவிடம் பொருளாதார தடைகளை நீக்க கோரியும், 1950-53 வடகொரிய போருக்கு ஒரு சரியான முடிவை அறிவிக்க கோரியும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இருதரப்பும் கோரிக்கைகளை ஏற்க மறுப்பு தெரிவித்ததால் அவர்களுக்கிடையேயான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது என இருநாட்டு அமைச்சகங்களும் தெரிவித்துள்ளன. 

2017ம் ஆண்டு அதிக முறை அணு ஆயுத சோதனை நடத்தி அமெரிக்காவை மிரட்டியதும், ட்ரம்ப் ஒரு பட்டனில் வடகொரியாவை அழிப்பேன் என்று கூறி கிம்மை ராக்கெட் மேன் என்றதும் குறிப்பிடத்தக்கது. 

.