This Article is From Oct 31, 2019

ஐ.எஸ். தலைவரை கொல்ல உதவிய நாயை கவுரவித்து ஃபோட்டோ வெளியிட்ட ட்ரம்ப்!!

வியட்நாம் போரில் சிறப்பாக பணியாற்றிய அமெரிக்காவின் ராணுவ உயர் அதிகாரி ஜேம்ஸ் மெக்லோகனுக்கு Medal of Honor விருது வழங்கப்பட்டது. இதனை ஃபோட்டோ ஷாப் செய்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஐ.எஸ். தலைவரை கொல்ல உதவிய நாயை கவுரவித்து ஃபோட்டோ வெளியிட்ட ட்ரம்ப்!!

ஐ.எஸ். தீவிரவாத தலைவர் பக்தாதியை கொல்வதற்கு ஒரு நாய்தான் முக்கிய காரணமாக விளங்கியது.

சர்வசேதத்திற்கு அச்சுறுத்தல் விளைவித்துக் கொண்டிருந்த ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அல் ப்க்தாதி, அமெரிக்காவின் தேடுதல் வேட்டையின்போது தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அமெரிக்கப்படையின் மோப்பநாய்தான் முக்கியமாக உதவியது. 

இந்த நிலையில் நாயை கவுரவிக்கும் விதமாக ட்ரம்ப் ஃபோட்டோ ஷாப் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

சிரியாவில் அமெரிக்க படைகள் நடத்திய தேடுதல் வேட்டையின்போது ஒரு சுரங்கத்திற்குள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் தப்பிச் சென்றுள்ளார். அவரை அமெரிக்கப்படையின் மோப்ப நாய்கள் துரத்திச் சென்றதால் வேறு வழியின்றி பக்தாதி தான் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் அவரது மகன்களும் உயிரிழந்தனர். அமெரிக்கா தரப்பில் மோப்ப நாய்க்கு காயம் ஏற்பட்டது. 

இறுதியில் பக்தாதியின் உடல் கடலில் வீசப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இந்தசம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து, தேடுதல் வேட்டையில் பக்தாதி கொல்லப்பட காரணமாக இருந்த நாயை ட்ரம்ப் வெகுவாக பாராட்டினார். 

இந்த நிலையில், நாயை கவுரவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபோட்டோ ஷாப் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ட்ரம்ப். அதுதான் தற்போது அமெரிக்காவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

வியட்நாமில் அமெரிக்க நடத்திய போரின்போது, அமெரிக்க வீரர் ஜேம்ஸ் மெக்லோகன் சக வீரர்கள் 10 பேரை சிறப்பாக செயல்பட்டு காப்பாற்றினார். இதற்காக அவருக்கு அமெரிக்காவின் Medal of Honor விருது வழங்கப்பட்டது.

அதனை ஃபோட்டோ ஷாப் செய்துள்ள ட்ரம்ப், வீரர் மெக்லோகனுக்கு பதிலாக பக்தாதியை துரத்திய நாயையும், அதற்கு மெடல் வழங்குவது போன்ற ஃபோட்டோவையும் வெளியிட்டுள்ளார். மெடலில் நாயுடைய பாதங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ட்ரம்பின் இந்த ஃபோட்டோ லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறது.

1969 மே 23-ம்தேதி நடைபெற்ற வியட்நாம் போரின்போது, அமெரிக்க தளபதி மெக்லோகன் தனது படையினருடன் டாம் கி என்ற இடத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்த்தரப்பினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் மெக்லோகன் மற்றும் அவரது படையினருக்கு காயம் ஏற்பட்டது.

தனது காயத்தை பொருட்படுத்தாமல் எதிரிப்படைகளை கொன்று குவித்து, சக வீரர்கள் 10 பேரை மெக்லோகன் காப்பாற்றினார். இதற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.