This Article is From Jul 19, 2018

மாற்றுத்திறனாளி மாஸ்டரை சக்கர நாற்காலியில் தள்ளி சென்ற நாய் -

சக்கர நாற்காலியில் இருக்கும் டானிலோவை, அவரது நாய் தள்ளிக்கொண்டு செல்லும் காட்சியை எம்பிஏ மாணவி ரெவில்லா பதிவு செய்துள்ளார்.

மாற்றுத்திறனாளி மாஸ்டரை சக்கர நாற்காலியில் தள்ளி சென்ற நாய் -

 

சக்கர நாற்காலியில் அமர்ந்து இருக்கும் மாற்றுத்திறனாளி மாஸ்டரை, அவரது நாய் தள்ளிச் செல்லும் காட்சிகள் பிலிப்பைன்ஸில் படம்பிடிக்கப்பட்டது. சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ அனைவரது மனதையும் உருக்கியுள்ளது

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 46 வயது டானிலோ என்ற நபருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஏற்பட்டதால், முதுகு தண்டு பாதிப்படைந்தது.  இந்த விபத்தினால், நடக்க முடியாமல் போன டானிலோ, சக்கர நாற்காலி பயன்படுத்தி வருகிறார். அவர் வளர்க்கும் செல்ல பிராணி டிக்காங் என்ற நாய், அவருக்கு உதவியாக இருந்து வருகிறது

சக்கர நாற்காலியில் இருக்கும் டானிலோவை, அவரது நாய் தள்ளிக்கொண்டு செல்லும் காட்சியை எம்பிஏ மாணவி ரெவில்லா பதிவு செய்துள்ளார். டானிலோக்கு உதவி செய்து கொண்டு,  நாற்காலியை தள்ளிச் செல்லும் செல்ல பிராணி டிக்காங்கின் வீடியோ சமூக வளைத்தளத்தில் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

 
 

 

Click for more trending news


.