This Article is From Jul 23, 2018

சீனாவில் 5,00,000 மில்லியன் வீட்டில் வாழப்போகும் செல்ல நாய்

சைலருக்கு கிடைத்த பிரபலம் சோவை சீன இ-காமர்ஸ் சந்தையான டேய்பவில் ஒரு நாய் உணவு மற்றும் பொம்மை விற்பனை கடை தொடங்க ஊக்கப்படுத்தியது

சீனாவில் 5,00,000 மில்லியன் வீட்டில் வாழப்போகும் செல்ல நாய்
Beijing:

பெய்ஜிங்: சைலரின் என்கிற அந்த நாயின் புதிய மேன்சன் இருக்கும் இடத்தில் முன்னர் கைவிடப்பட்ட கிடங்கு ஒன்று இருந்தது.

கடந்த சில வருடங்களாக அந்த நாய் வசித்து வந்த இடத்தை, கட்டிட அமைப்பாளர்கள் ஸ்பா, ட்ராம்பொலின், இண்டோர் ஸ்விம்மிங் பூல் மற்றும் பார்ட்டி அறையின் கூடிய அதனின் மேன்சனாக மாற்றியுள்ளனர். அதன் வாயிலில் ”பேரடைஸ் (சொர்கம்)” என்று எழுதப்பட்டுள்ளது.

ஒரு நாய்க்கு அரை மில்லியன் டாலர் கிடைத்தால் இவையெல்லாம் உருவாக்க முடியும். இது அன்பின், பொருளாதார முன்னேற்றத்தின் அடையாளம் . உங்களை பிரபலமாக்கும் இணையத்தின் சக்தியும் கூட.

அதன் சொந்தக்காரரான 31 வயது சோ டியான்க்ஸியோ, “சைலர் வருவதற்கு முன்பாக எனக்கு வாழ்வதற்கென்று எதுவுமே இல்லை, இவன் தற்போது எனக்கு ஒரு குறிக்கோளைக் கொடுத்துள்ளான்” என தெரிவித்துள்ளார்.

சீனக் கம்யூனிஸ்ட் தலைவர் மாவோவின் பாதுகாவலர்கள், மேற்கத்திய சிந்தனைகளை களையெடுக்கும் முயற்சியில் ’பணக்காரர்களின் பொருள்’ என கருதப்பட்ட நாய்களை கொன்று குவித்த வரலாறு உடைய சீனாவில் தற்போது, அதற்கு ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு சீன இளைஞர்கள் செல்லப் பிராணிகளுக்காக தாராளமாக செலவு செய்வதை அதிகரித்து வருகின்றனர்.

ஜெர்மானிய சந்தை ஆராய்ச்சி நிறுவனமாக யூரோமானிட்டர் அறிக்கையில், சீனர்கள் 2022 வாக்கில் செல்லப்பிராணிகளுக்கென ஏழு பில்லியன் டாலர் செய்வார்கள், இது கடந்த ஆண்டின் அளவை விடவும் 2.6 பில்லியன் டாலர் அதிகம் எனத் தெரியவந்துள்ளது.

pu0llg1g

உடன்பிறப்புகள் இல்லாத ஒரு தலைமுறை, குடும்பத்தின் கூடுதல் சுமை மற்றும் அதிகம் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வந்ததினால் சீனாவில் கல்யாண விகிதமும், பிறப்பு விகிதமும் சமீப வருடங்களில் வெகுவாக குறைந்துள்ளது, என வாஷிங்டன் ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்ட்டியூடில் ஊள்ள சீனா ஆய்வாளர் செங் லீ தெரிவித்தார்.

”அவர்களுக்கு ஒரு விதமான சுதந்திர உணர்வு இருந்தாலும், ஒரு துணை தேவைப்படுகிறது” என லீ கூறியுள்ளார்.

தன் குடும்பத்தில் ஒரே பிள்ளையான சோவும், பல சமயங்களில் தனிமையாக உணர்ந்திருக்கிறார். சோ தன்னுடைய மொபைலை பயன்படுத்தி சைலர் சாகசம் செய்கின்ற காட்சிகளை எடுத்த வீடியோக்கள் இணையத்தில் லட்சக்கணக்கான பார்வையை பெற்றுள்ளது.

ஒரு வழியாக, மக்கள் இந்த காட்சிகளைப் பார்த்து இணைய வெளியில் பகிரப்பட்டு பல லட்சம் பார்வைகளை இன்றுவரை பெற்றுள்ளது. மிக விரைவாக, சைலரை சமூக ஊடகங்களில் எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். சீனா எங்கிலும் இருந்து ரசிகர்கள் அவருக்கு கடிதங்கள் எழுதி, காண்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் சமூக ஊடகங்களில் செல்லப் பிராணி பிரபலங்கள் அதிக அளவில் உள்ளன. நியூயூ எனப்படும் அமெரிக்க எஸ்கிமோ நாய் மற்றும் துவான்வு எனப்படும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பூனை போன்ற செல்லப் பிராணிகள் பாடகர் கேய்ன் வெஸ்ட்டை விடவும் அதிக அளவிலான ரசிகர்களை பெற்றுள்ளனர். 

lgjbsd44

சீனாவில் வர்க்க அடையாளங்களைப் பற்றி ஆய்வு செய்து வரும் ஆமி ஹூய்லின் ட்ஸாங், இந்த செல்லப் பிராணிகள் மீதான மோகம் சுய வெளிப்பாடுடன் தொடர்புடையது என தெரிவித்துள்ளார்.

”நாய் வளர்ப்பது என்பது தற்போது ஃபேஷனாகவும் அல்லது புதிய சமூக அடையாளமாகவும் இருக்கலாம்” என ஆமி தெரிவித்துள்ளார். ஒரு குழந்தை சீன தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு, அவர்களின் விலங்குகளுக்கு எதுவுமே மிக சிறந்ததாக இருக்காது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

”அவர்களின் தங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் மிகவுல் செல்லமாக வளர்க்கப்பட்டுவிட்டனர் தற்போது அதை தங்களின் செல்லப் பிராணிகளின் மீது காண்பித்து வருகின்றனர்” என ஷாங்காயில் உள்ள நாய் மற்றும் பூனை சந்தை ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரூ அட்கின்ஸன் தெரிவித்துள்ளார்.

sgk8tf4g

சைலருக்கு கிடைத்த பிரபலம் சோவை சீன இ-காமர்ஸ் சந்தையான டேய்பவில் ஒரு நாய் உணவு மற்றும் பொம்மை விற்பனை கடை தொடங்க ஊக்கப்படுத்தியது.

சோவின் காதலி லியு வேய் அவருக்கு கடையை நடத்துவதற்கும், வேலையாட்களை நிர்வகிப்பதற்கும் உறுதுணையாக இருக்கிறார். 2017 வாக்கில் அவர் ஒரு புது வாழ்க்கையை தொடங்க ஏற்ற பணம் அவரிடம் இருந்தது.

தன்னுடைய செல்லப் பிராணிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இடது கையில் சைலர் என்ற பெயரை சிவப்பு எழுத்துக்களில் பச்சை குத்திக்கொண்டுள்ளார். ஆனால் அது மட்டும் போதுமானதாக படவில்லை. ஒரு நாய்க்கு என்னதான் தேவைப்படும் என ஆச்சரியப்பட்ட சோ அதிக இடம் தேவை என முடிவு செய்தார்.  

ltm3q5d

ஷுன்யூவில் இருக்கும் ஒரு பழைய கிடங்கு ஒன்றை கண்டுபிடித்த சோ, அதை வாங்கி அதன் மறுசீரமைப்பை தானே வடிவமைத்தார். சைலர் வருவதற்கு முன்பாக சோ “மிகவும் சோம்பேறித்தனமாகவும், பெரும்பாலான நேரத்தை வீடியோ கேம்ஸ் விளையாடுவதிலே கழித்ததாகவும்” லியு தெரிவித்தார். மேலும் “தற்போது அவர் ஆர்வமிக்கவராகவும், நேர்மையானராகவும் இருக்கிறார்” என்றார்.

அவர்கள் சைலர் மேன்சனை மே மாதத்தில் பொது மக்களுக்காகத் திறந்துள்ளனர். நாய்கள் இங்குள்ள ஸ்பாவிம் 175 யுவான் செலவில் மருத்துவ குளியல் எடுத்துக்கொள்ளலாம் அல்லது 400 யுவான் செலவில் எண்ணெய் மசாஜும் செய்துகொள்ளலாம்.

தனிப்பட்ட பார்வையாளர்களும் இரவு நேரங்களில் குளிரூட்டப்பட்ட அறையில் தங்க வரவேற்கப்படுகின்றனர். மேலும் விருப்பப்பட்டால் மனிதர்களும் தங்களுடைய செல்லப் பிராணிகளுடன் ஸ்விம்மிங் பூலில் இணைந்து கொள்ளலாம்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.