This Article is From Jul 31, 2019

''சட்டம் இயற்றுகிறோமா? பீட்ஸா டெலிவரி செய்கிறோமா?'' - திரிணாமூல் காங். கேள்வி!!

அவசர கதியில் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இதுதொடர்பாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

''சட்டம் இயற்றுகிறோமா? பீட்ஸா டெலிவரி செய்கிறோமா?''  - திரிணாமூல் காங். கேள்வி!!

நாடாளுமன்றத்தை பாஜக கேலிக்குரியதாக மாற்றியுள்ளது என்று திரிணாமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

New Delhi:

நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய முத்தலாக் உள்ளிட்ட மசோதாக்கள் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, சட்டம் இயற்றுகிறோமா அல்லது பீட்ஸா டெலிவரி பண்றோமா என்று கேள்வி எழுப்பியுள்ளது. 

இந்த விவகாரத்தை மம்தாவின் நம்பிக்கைக்குரிய எம்.பி. டெரிக் ஓ பிரைன் எழுப்பியிருக்கிறார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், 'நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்களை ஆய் வசெய்ய வேண்டும். நான் அளித்திருக்கும் தகவலில் நடைபெற்று வரும் நாடாளுமன்றம் எவ்வளவு அவசர கதியில் மசோதாக்களை நிறைவேற்றுகிறது என்பது புரியும். நாம் என்ன சட்டம் இயற்றுகிறோமா அல்லது பீட்ஸா டெலிவரி செய்கிறோமா ' என்று கூறியுள்ளார்.
 


பிரைன் அளித்திருக்கும் விவரத்தின்படி,  காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கடந்த 2004 - 2009 வரையிலான காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களில் மொத்தம் 60 சதவீதம் ஆய்வு செய்யப்பட்டவையாக இருந்தன. 

இதற்கு அடுத்ததாக 2009-2014 வரையில் 71 சதவீதம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் 2014 - 19 வரையில் 26 சதவீத மசோதாக்களும், தற்போது நடைபெற்று வரும் கூட்டத் தொடரில் 5 சதவீத மசோதாக்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மற்றவை அப்படியே வாக்கெடுப்பின் மூலமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 

மத்திய பாஜக அரசுக்கு சவால் என்றே கருதப்பட்டு வந்த முத்தலாக மசோதா நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. அவசர கதியில் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இதுதொடர்பாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. 
 

.