This Article is From Feb 29, 2020

டெல்லியில் கலவரம் நடந்த பகுதிகளில் தற்போதைய நிலை என்ன?

Delhi violence: மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், அமைதி காணப்படுகிறது. ஏனெனில், பெரும்பாலான குடியிருப்பு வாசிகள் அங்கிருந்த வெளியேறியுள்ளனர். இந்த பகுதிகள் இயல்புக்குத் திரும்ப இன்னும் சில காலம் எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Delhi violence: இந்த வன்முறை சம்பவத்தில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • வன்முறைக்கு இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • ஒரு சில பகுதிகள் இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது.
  • கூட்டமாக கூடுவதற்கு விதிக்கப்பட்ட தடை அமலில் உள்ளது.
New Delhi:

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் காரணமாக டெல்லியில் கடந்த சில நாட்களாக நடந்த கலவரத்தை தொடர்ந்து, ஒப்பீட்டளவில் வடகிழக்கு பகுதிகளில் நிலைமை இன்று அமைதியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், கூட்டமாகக் கூடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை இன்னும் அமலில் உள்ளது. 

இந்த வன்முறையில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்டதாக 500க்கும் மேற்பட்டோர் சிறை வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வடடெல்லி மாநகராட்சி பொது இடங்களிலிருந்து பெரும்பாலான குப்பைகளை அகற்றியுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து சீராகியுள்ளது. சில கடைக்காரர்கள் கடைகளைத் திறக்க தொடங்கியுள்ளனர் என அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். 

பதற்றமான பகுதிகளில் அதிரடிப்படை வீரர்கள் நீள உடையில் காணப்படுகின்றனர். அதேபோல், போலீசாருடன், மத்திய துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். 

மகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஷிவ் விஹார் பகுதியில் எரிந்த கார்கள் மற்றும் குப்பைகளை அகற்றச் சாலைகளில் பல கிரேன்கள் செயல்பட்டு வருகின்றன. 

மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், அமைதி காணப்படுகிறது. ஏனெனில், பெரும்பாலான குடியிருப்பு வாசிகள் அங்கிருந்த வெளியேறியுள்ளனர். இந்த பகுதிகள் இயல்புக்குத் திரும்ப இன்னும் சில காலம் எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த பிப்.23 முதல் 26ம் தேதி வரை 4 நாட்களாக நடந்த வன்முறையில் அதிகபட்சமாக 25ம் தேதி மட்டும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 7,500 அழைப்புகள் வந்துள்ளன. 

மக்கள் "வதந்திகளை நம்பவேண்டும் என்றும் இனவாத பதட்டத்தைத் தூண்டுவதில் ஆர்வமுள்ளவர்களின் தீய வடிவமைப்புகளுக்கு இரையாகக்கூடாது" என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐபிஎஸ் அதிகாரி எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவாவுக்கு மார்ச் 1 முதல் மேலதிக உத்தரவு வரும் வரை டெல்லி காவல்துறைத் தலைவராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது; அவர் அமுல்யா பட்நாயக்குக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். 

.