This Article is From Dec 16, 2019

நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாக உணரமுடியவில்லை: ஜாமியா பல்கலை. மாணவி உருக்கம்!!

Jamia Millia Islamia protests: ஜாமிய பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, போராட்டக்காரர்கள், போலீசாரிடையே வன்முறை நிலவியது. தொடர்ந்து, ஜாமிய பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த போலீசார் 100க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மாணவர்கள் அதிகாலை 3.30 மணி அளவில் விடுவிக்கப்பட்டனர்.

நான் இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவள் இல்லை எனினும், முதல் நாளிலிருந்து போராட்டத்தில் முன்னாள் இருக்கிறேன்.

New Delhi:

புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, அவர்களை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதால் மாணவர்கள் நூலகத்திலும், சாலைகளிலும் இரத்தக் காயங்களுடன் காணப்பட்டனர். மாணவிகள் பலரும் புதரில் மறைந்த படி காணப்பட்டனர். 

இதுதொடர்பாக இன்று காலை அந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, டெல்லியே படிக்கும் மாணவர்களுக்கு சிறந்த இடம் என்று நினைத்திருந்தோம், இது மத்திய அரசின் பல்கலைக்கழகம், இந்த பல்கலைக்கழகமே பாதுகாப்பான இடம் எங்களுக்கு எதுவும் ஆகாது என்று நினைத்திருந்தேன். 

'ஒட்டு மொத்த நாட்டிலும் என்னால் தற்போது, பாதுகாப்புடன் இருப்பதாக உணரமுடியவில்லை. நான் எங்கு அடித்துக்கொல்லப்படுவேன் என்று தெரியவில்லை. நாளை என் நண்பர்கள் இந்தியர்களாக இருப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை'. 

நான் இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவள் இல்லை எனினும், முதல் நாளிலிருந்து முன்னாள் இருக்கிறேன். ஏன்? எனது குடும்பத்திற்கு என்ன நேர்ந்தது என்பதன் காரணமாக? சரியானதற்கு துணை நிற்க முடியாவிட்டால், நமது கல்விக்கு என்ன  பயன்? என்று அந்த மாணவி உருக்கமாக கூறினார். 

தொடர்ந்து பேசிய மற்றொரு பெண் மாணவி, ஜாமியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் காவல்துறை நுழைந்ததும், மாணவர்களை சுற்றி வளைத்ததும், கைகளை தூக்கிய படி வளாகத்தை விட்டு வெளியேறச் செய்ததும் என திகிலூட்டும் திருணங்களை கண்ணீருடன் விவரித்தார். 

இந்த வன்முறை தொடங்கும் போது நாங்கள் நூலகத்தில் இருந்தோம்; நிலைமை மோசமாகி வருவதாக மேற்பார்வையாளரிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. நான் நூலகத்தில் இருந்து புறப்படவிருந்த நேரத்தில் மாணவர்கள் கூட்டம் நூலகத்திற்குள் விரைந்து வந்து தஞ்சம் புகுந்தது. 30 நிமிடத்தில் மொத்த நூலகமே நிரம்பியது. 

அப்போது நூலகத்திற்கு உள்ளே வந்த போலீசார் தாக்குதல் நடத்த துவங்கினர். பல மாணவர்கள் இரத்த காயங்களுடன் துடித்தனர். தொடர்ந்து, போலீசார் அனைவரையும் வெளியே செல்லச் சொன்னார்கள். பின்னர் எனது விடுதி கட்டிடத்தை நோக்கி நான் நடக்க துவங்கிய போது, சாலை முழுவதும் மாணவர்கள் இரத்த காயங்களுடன் மயங்கி கிடப்பதை பார்த்தேன்.

தொடர்ந்து, போலீசார் எங்களை கைகளை தூக்கிய படியே செல்லுமாறு வற்புறுத்தினர். விடுதியை நெருங்கிய போது, ஒரு சில மாணவர்கள் விடுதிக்குள் வந்து, பெண் போலீசார் எங்களை தாக்க வருவதாக எச்சரித்தனர். இதையடுத்து, நாங்கள் சில புதருக்குள் மறைந்து இருந்தோம் என்று நேற்றிரவு நடந்ததை அந்த மாணவி நினைவு கூர்ந்தார். 

.