This Article is From Mar 13, 2020

வெறுப்புணர்வு பேச்சு: டெல்லி காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாகப் பேசியதாகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சல்மான் குர்ஷித், பாஜகவின் அனுராக் தாகூர், கபில் மிஸ்ரா உள்ளிட்டோருக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெறுப்புணர்வு பேச்சு: டெல்லி காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீதிபதிகள் டி.என்.படேல் மற்றும் ஹரி சங்கர் தலைமையிலான அமர்வு

ஹைலைட்ஸ்

  • வெறுப்புணர்வு பேச்சு தொடர்பான வழக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவு
  • டெல்லி வன்முறை ஏற்பட காரணமான பேச்சு
  • ஆம் ஆத்மி கட்சியும் பதிலளிக்க உத்தரவு
New Delhi:

வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாகப் பேசியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து காவல்துறை மற்றும் ஆம் ஆத்மி கட்சி பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டெல்லியில் நடந்த கடும் வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 200 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வன்முறை மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பாஜக தலைவர்கள் பேசியதே இந்த மோதல் மற்றும் வன்முறைக்குக் காரணம் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாகப் பேசியதாகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சல்மான் குர்ஷித், பாஜகவின் அனுராக் தாகூர், கபில் மிஸ்ரா உள்ளிட்டோருக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு நீதிபதிகள் டி.என்.படேல் மற்றும் ஹரி சங்கர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து விளக்கம் அளிக்க ஆம் ஆத்மி கட்சி மற்றும் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. 

மேலும், வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாகப் பேசியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. 

இதேபோல், கடந்த மாதம் வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தில் ஏற்பட்ட சேதம் தொடர்பாக ஆய்வு செய்யச் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மனு தொடர்பாகவும் டெல்லி காவல்துறையும், டெல்லி அரசும் மார்ச்.20ம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.