This Article is From Oct 12, 2018

டெல்லியில் காற்று மாசுபாடு குறையத் தொடங்கியது - பொதுமக்கள் நிம்மதி

டெல்லியில் கடந்த சில நாட்களாக அதிகமாக காணப்பட்ட காற்று மாசுபாடு தற்போது குறையத் தொடங்கியுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாடு குறையத் தொடங்கியது - பொதுமக்கள் நிம்மதி

காற்று மாசு காரணமாக பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

New Delhi:

காற்று மாசுபடுவதை air quality index (AQI) என்று குறிப்பிட்டு வருகிறோம். இதன் அளவு 0-50- ஆக இருந்தால் காற்று தூய்மையாக இருக்கிறது என்று பொருள், 51-100 என்றால் திருப்தி அளிக்கிறது என்றும், 101-200 வரை இருந்தால் மிதமாக மாசுபட்டுள்ளது என்றும், 201-300 இருந்தால் காற்று மாசுபட்டிருக்கிறது என்றும், 301-க்கு மேல் இருந்தால் அதிகமாக மாசுபட்டுள்ளது என்றும் பொருள்.

பஞ்சாப் மற்றும் அரியானாவில் விவசாய கழிவுகள் எரிக்கப்படுவதன் காரணமாக எழும்புகை, தலைநகர் டெல்லியை சமீபத்தில் சூழ்ந்தது. இத்துடன் இயல்பாகவே டெல்லியில் இருக்கும் வாகனப் புகை காரணமாக காற்று கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது காற்றின் வேகம் சற்று அதிகரித்திருப்பதால் மாசுபட்ட காற்று அடித்துச் செல்லப்பட்டு சற்று தூய்மையான காற்று நிலவுகிறது.

இதன்படி, இன்று மாலை 4 மணிக்கு காற்றில் மாசின் அளவு ஆய்வு செய்யப்பட்டது. இதில் மிதமான அளவு (154) காற்று மாசுபட்டிருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

.