This Article is From Oct 29, 2019

தீபாவளியன்று டெல்லியில் சரமாரியாக வெடித்த பட்டாசுகள்! மூச்சுத் திணறலால் முதியோர் அவதி!!

அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பதால் வரும் புகை, அதிக கார் பயன்பாடு உள்ளிட்டவற்றால் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. குறிப்பிட்ட சிலவகை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்ட நிலையில், மக்கள் கட்டுப்பாட்டை மீறி வெடி வெடித்ததாக விமர்சனங்கள் எழுகின்றன.

தீபாவளியன்று டெல்லியில் சரமாரியாக வெடித்த பட்டாசுகள்! மூச்சுத் திணறலால் முதியோர் அவதி!!

டெல்லியில் காற்று மாசு 'மிக மோசம்' என்ற அளவில்தான் உள்ளது.

தலைநகர் டெல்லியில் ஏற்கனவே காற்று மாசு அதிகம் காணப்பட்ட நிலையில், தீபாவளியை முன்னிட்டு மக்கள் சரமாரியாக பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதனால், காற்று மாசு அங்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. 

தீபாவளி கொண்டாட்டம் குறித்து கருத்து தெரிவித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில்தான் காற்று மாசு குறைந்திருப்பதாக கூறியிருந்தார். இருப்பினும் டெல்லி மக்கள் சமூக வலைதளங்களில் புலம்பித் தீர்த்துள்ளனர். 

டெல்லியை சேர்ந்த பிரியங்கா சவுத்ரி ரெய்னா என்பவர் தனது ட்விட்டர் பதிவில், 'பூஜைகளுக்காக எனது பெற்றர் வீட்டின் ஜன்னலை திறந்து வைத்தார்கள். சுத்தமான காற்று உள்ளே வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் மாசடைந்த காற்றுதான் உள்ளே வந்தது. இது எங்களையும், வீட்டில் உள்ள குழந்தைகளையும் கடுமையாக பாதித்திருக்கிறது. எங்களால் இருமுவதை நிறுத்திக் கொள்ள முடியவில்லை' என்று கூறியுள்ளார். 

இன்னொரு ட்விட்டர் பயனாளி ஒருவர் மாசடைந்த டெல்லியின் புகைப்படத்தை வெளியிட்டு 'சிறப்பான சம்பவத்தை டெல்லி மக்கள் செய்துள்ளனர்' என்று வஞ்சப் புகழ்ச்சியாக கூறியுள்ளார். 
 

.

இன்னொரு சமூக வலைதள பயனாளர் ஒருவர், 'மக்களிடம் தீபாவளி பட்டாசால் ஏற்படும் மாசு குறித்து விழிப்புணர்வு இல்லை. நள்ளிரவு ஒரு மணியின்போதும் வெடிச்சத்தம் கேட்டது. சிலர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர்' என்று குறிப்பிட்டுள்ளார். 

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகம் இருக்கும் நிலையில், 2 வகையான பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், காற்றை அதிகளவு மாசுபடுத்தும் பட்டாசுகளை டெல்லி மக்கள் சரமாரியாக வெடித்துள்ளனர். 

உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி ஆண்டுக்கு 40 லட்சத்திற்கும் அதிகமானோர் காற்று மாசுபாட்டால் உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

.