This Article is From Sep 11, 2018

4 வயது குழந்தையை இரும்புக் கம்பியால் சூடுபோட்ட வளர்ப்புத் தந்தை – ஐதராபாத்தில் அதிர்ச்சி

குழந்தையின் தாயார் தனது முதல் கணவரை பிரிந்து விட்டு 2-வது கணவருடன் வாழ்ந்து வருகிறார்

4 வயது குழந்தையை இரும்புக் கம்பியால் சூடுபோட்ட வளர்ப்புத் தந்தை – ஐதராபாத்தில் அதிர்ச்சி

பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து என்.ஜி.ஓ. நிறுவனத்தால் 4 வயது குழந்தை மீட்கப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்

  • 4 வயது குழந்தையை அவரது தாய் மற்றும் வளர்ப்புத் தந்தை ஆகியோர் தாக்கியுள்ளன
  • சூடு வைக்கப்பட்டதை கண்ணீர் மல்க குழந்தை விவரித்தது
  • பக்கத்து வீட்டினர் தகவல் அளித்தால் குழந்தை மீட்கப்பட்டது
Hyderabad:

ஐதராபாத் : ஐதரபாத்தில் 4 வயது குழந்தையை அவரது வளர்ப்பு தந்தை பலமாக தாக்கியுள்ளார். குழந்தையை பலமுறைக் கிள்ளி காயம் ஏற்படுத்திய அந்த நபர், பழுக்க காய்ச்சப்பட்ட இரும்புக் கம்பியால் குழந்தையின் உடலில் சூடு போட்டுள்ளார். இதனால் குழந்தை அலறியுள்ளது. இதைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் தகவல் அளித்தனர். அதன்பின்னர் வந்த தொண்டு நிறுவனத்தினர் குழந்தையை மீட்டனர்.

நடந்த சம்பவம் பற்றி 4 வயது குழந்தை கூறும்போது, “ நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது என் தந்தை என்னை அடித்தார். பின்னர் எனக்கு கம்பியால் சூடு வைத்தார்” என்றது. இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் மற்றும் அவரது 2-வது கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 25 வயதுடைய தாய் தனது முதல் கணவரை பிரிந்து இன்னொரு நபருடன் வாழ்ந்து வருகிறார். அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த தாயும், அவரது 2-வது கணவரும் கோபத்தை குழந்தை மீது காட்டியுள்ளனர்.

கண்ணீர் மல்க மீட்கப்பட்ட குழந்தை அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

 

.