This Article is From Nov 29, 2019

வேலைக்காக தினமும் 22 கி.மீ. நடந்து வரும் ஓட்டல் சர்வருக்கு காரை பரிசளித்த திருமண ஜோடி!!

ஆட்ரியன்னாவுக்கு உதவிய தம்பதியினர், தங்களது விவரங்களை வெளியிடவில்லை. ஒருவேளை அவர்கள் ஆட்ரியன்னாவை அவர் நடந்து வரும்போது அடிக்கடி பார்த்திருக்க கூடும் என்று கருதப்படுகிறது. 

வேலைக்காக தினமும் 22 கி.மீ. நடந்து வரும் ஓட்டல் சர்வருக்கு காரை பரிசளித்த திருமண ஜோடி!!

புதிதாக கார் வாங்குவதற்காக பெண் சர்வர் பணத்தை சேமித்து வந்துள்ளார்

வேலைக்காக தினமும் 22 கிலோ மீட்டர் நடந்து வந்த ஓட்டல் சர்வரைப் பாராட்டி, அவருக்கு இளம் தம்பதியினர் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் கால்வெஸ்டன் நகரில் ஒரு உணவகம் இயங்கி வருகிறது. இங்கு ஆட்ரியன்னா எட்வர்ட்ஸ் என்ற பெண் பணியாற்றி வருகிறார்.

வேலைக்காக அவர் தினமும் 22 கிலோமீட்டர் தூரம் நடந்து ஓட்டலுக்கு வருகிறார். இந்த நிலையில் ஓட்டலுக்கு திருமணமான இளம் ஜோடி வந்துள்ளது. அவர்கள் ஆட்ரியன்னாவைப் பற்றி தெரிந்து கொண்டனர்.

புதிதாக கார் வாங்குவதற்காக அந்த பெண் சர்வர் பணத்தை சேமித்து வந்துள்ளார். இந்த விஷயமும் அந்த ஜோடிக்கு தெரிந்துள்ளது. 

இதையடுத்து, 2011 மாடலை சேர்ந்த Nissan Sentra என்ற காரை வாங்கி, பணிப்பெண் ஆட்ரியன்னாவுக்கு அந்த ஜோடி அளித்துள்ளது. 

இதுகுறித்து ஆட்ரியன்னா கூறுகையில், 'இது கனவா, நனவா என்று தெரியவில்லை. இனிமேல் யாருக்கும் உதவி தேவைப்பட்டது என்றால் நான் அவர்களுக்கு நிச்சயம் உதவி செய்வேன். என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்' என்று கூறியுள்ளார். 

ஆட்ரியன்னாவுக்கு உதவிய தம்பதியினர், தங்களது விவரங்களை வெளியிடவில்லை. ஒருவேளை அவர்கள் ஆட்ரியன்னாவை அவர் நடந்து வரும்போது அடிக்கடி பார்த்திருக்க கூடும் என்று கருதப்படுகிறது. 

Click for more trending news

.