This Article is From May 04, 2020

தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் துணை ராணுவத்தினர் 3 பேர் வீர மரணம்!!

ரிசர்வ் போலீஸ் படையின் வாகனத்தை குறி வைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து ரிசர்வ் போலீசார் பதிலடி கொடுக்க ஆரம்பித்தார்கள். 

தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் துணை ராணுவத்தினர் 3 பேர் வீர மரணம்!!

பாதுகாப்பு படை தரப்பில் கர்னல் மற்றும்மேஜர் உள்பட 3 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹைலைட்ஸ்

  • ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் இன்று என்கவுன்ட்டர் நடைபெற்றது
  • தீவிரவாதிகள் தாக்குதலில் 3 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்
  • என்கவுன்ட்டர் குறித்த முழு விவரங்களை விரைவில் வெளியிடுகிறது ராணுவம்
New Delhi:

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் துணை ராணுவத்தினர் 3 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். காஷ்மீரின் ஹந்த்வாராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

இங்கு ரிசர்வ் போலீஸ் படையின் வாகனத்தை குறி வைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து ரிசர்வ் போலீசார் பதிலடி கொடுக்க ஆரம்பித்தார்கள். 

இதில் பாதுகாப்பு படை தரப்பில் கர்னல் மற்றும்மேஜர் உள்பட 3 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. 

நேற்று முன்தினம் இதே பகுதியில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினர் மற்றும், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதலில் பாதுகாப்புப் படையினரைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். 


இதில் கமான்டிங் ஆபிசர் ஒருவரும், 21 ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவின் மேஜர் ஒருவர் மற்றும் 2 பாதுகாப்புப்படை வீரர்களும், பாதுகாப்புப் படையினரைத் தவிர்த்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறை ஜவான் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் ஹந்த்வாராவில் என்கவுன்ட்டர் நடைபெற்று வருகிறது. விரைவில் இதுபற்றிய விரிவான தகவல்களை ராணுவம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

.