This Article is From Jul 25, 2020

ஆய்வாளரை சுட்டு தானும் தற்கொலை செய்துகொண்டு சிஆர்பிஎப் துணை ஆய்வாளர்!

நேற்றிரவு 10.30மணி அளவில் லோதி எஸ்டேட் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது

ஆய்வாளரை சுட்டு தானும் தற்கொலை செய்துகொண்டு சிஆர்பிஎப் துணை ஆய்வாளர்!

ஆய்வாளரை சுட்டு தானும் தற்கொலை செய்துகொண்டு சிஆர்பிஎப் துணை ஆய்வாளர்!

New Delhi:

சிஆர்பிஎப் துணை ஆய்வாளர் ஒருவர் ஆய்வாளர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, நேற்றிரவு 10.30மணி அளவில் லோதி எஸ்டேட் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே மோதல் போக்கு நிலவியதாக கூறப்படுகிறது. 

போலீஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது, இரண்டு சிஆர்பிஎப் வீரர்களும் தரையில் விழுந்து கிடந்துள்ளனர். இருவருக்கும் துப்பாக்கி காயங்கள் இருந்துள்ளன. சம்பவ இடத்திலே இருவருமே உயிரிழந்துள்ளனர். 

முதற்கட்ட விசாரணையில் இரு வீரர்களுக்கும் மோதல் நிலவியுள்ளது. இதில், துணை ஆய்வாளர் கர்ணல் சிங், ஆய்வாளர் தஷ்ராத் சிங் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். 

தொடர்ந்து, இந்த மோதலுக்கான பின்னணி குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

.