சத்தீஸ்கரில் நக்சல் தேடுதல் வேட்டையில் சிஆர்பிஎஃப் வீரர் உயிரிழப்பு

Chhattisgarh Naxal Encounter:சிஆர்பிஎஃப்பின் 151வது படைக்குழுவைச் சேர்ந்த கான்ஸ்டபிள் கம்தா பிரசாத் மோதலில் துப்பாக்கி குண்டு காயத்தினால் உயிரிழந்தார்.

சத்தீஸ்கரில் நக்சல் தேடுதல் வேட்டையில் சிஆர்பிஎஃப் வீரர் உயிரிழப்பு

Naxal Encounter In Chhattisgarh: பிஜாப்பூரில் நக்சல்களுடன் இன்று காலை 4 மணிக்கு ஏற்பட்டது

Bijapur:

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் நக்சல்களுடன் இன்று காலை 4 மணிக்கு ஏற்பட்ட மோதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் பல பகுதிகளில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

பிஜாப்பூர் பகுதியில் நக்சலைட்டுகள் பதுக்கி இருப்பதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பந்த இடங்களுக்கு விரைந்து சென்ற வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட் படையினர் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சிஆர்பிஎஃப்பின் 151வது படைக்குழுவைச் சேர்ந்த கான்ஸ்டபிள் கம்தா பிரசாத் மோதலில் துப்பாக்கி குண்டு காயத்தினால் உயிரிழந்தார்.

Newsbeep

இப்பகுதியில் தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன. 

செவ்வாயன்று டண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு நக்சல்கள் கொல்லப்பட்டனர்.