This Article is From Feb 25, 2020

சட்டீஸ்கரில் என்கவுன்ட்டரில் காயம் அடைந்த துணை ராணுவ வீரர் உயிரிழப்பு!!

தலைமை காவலர் அஜித் சிங்கிற்கு வயிற்றுப் பகுதியில் குண்டுக் காயம் ஏற்பட்டது. இதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சட்டீஸ்கரில் என்கவுன்ட்டரில் காயம் அடைந்த துணை ராணுவ வீரர் உயிரிழப்பு!!

முன்னதாக நடந்த தாக்குதலின்போது 2 கோப்ரா படையின் வீரர்கள், மாவோயிஸ்ட் ஒருவர் உயிரிழந்தார்.

Raipur:

சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான துப்பாக்கிச் சண்டையின்போது காயம் அடைந்த துணை ராணுவ வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 10-ம்தேதி பீஜப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் ரிசர்வ் போலீஸ் படையின் எலைட் பிரிவான கோப்ரா கமாண்டோ வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் கோப்ரா படைப்பிரிவை சேர்ந்த 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மாவோயிஸ்ட் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அஜித் சிங் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் கண்டாலா கிராமத்தை சேர்ந்தவர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.