This Article is From Feb 22, 2019

'ஸ்டிவ் இர்வினை' கவுரவித்து இன்றைய கூகுள் டூடுள்..!

ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் பிப்ரவரி 22,1962 யில் பிறந்த இர்வினின் நினைவாக இன்று கூகுள் டூடுள் அமைக்கப்பட்டுள்ளது.

'ஸ்டிவ் இர்வினை' கவுரவித்து இன்றைய கூகுள் டூடுள்..!

இர்வினின் நினைவாக இன்று கூகுள் டூடுள் அமைக்கப்பட்டுள்ளது.

‘தி க்ராக்கடைல் ஹன்டர்' என உலகம் முழுவது அழைக்கப்படுவர் ஸ்டிவ் இர்வின். வனப் பாதுகாவலர், தொலைக்காட்சி நடிகர், ஆராய்சியாளர் என பன்முகம் கொண்டவர் ஸ்டிவ் இர்வின்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் பிப்ரவரி 22,1962-யில் பிறந்த இர்வினின் நினைவாக இன்று கூகுள் டூடுள் அமைக்கப்பட்டுள்ளது.

இர்வினின் ஆறாவது பிறந்தநாளுக்கு அவரின் பெற்றோர் ஒரு பைத்தான் பாம்பை பரிசாக வழங்கினர். அன்று முதல் விலங்குகளின் மீது தீரா காதல் கொண்டவராக மாறினார்.

ஸ்டிவ் இர்வினின் பெற்றோர் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்டு பகுதியில் விலங்குகள் பூங்கா ஒன்றை உருவாக்கினர். பின்னாளில் அந்த பூங்காவே ‘ஆஸ்திரேலியா பூங்கா' என பெயரிடப்பட்டது.

அந்த பூங்காவை காண வந்த டெர்ரிதான் பின்னாளில் திருமதி.இர்வினாக மாறினார். ஸ்டிவ் இர்வின் மற்றும் டெர்ரி தங்களது ஹனிமூனை முதலைகளைப் பிடிப்பதில் கழித்தனர்.

 

tn2hd8ks

 

‘க்ரக்கடைல் ஹன்டர்' என்னும் புகழ் பெற்ற டிவி நிகழ்ச்சியை 1996 துவங்கினார் ஸ்டிவ் இர்வின். துவங்கியது முதல் அந்த நிகழ்ச்சி செம ஹிட். உலக புகழ் பெற்ற வனப் பாதுகாவலராக ஸ்டிவ் இர்வின் அறியப்பட்டார்.

 

4jsn2h78

தனது  மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் ஸ்டீவ் இர்வின்.

2006 ஆம் ஆண்டு ஸ்டிங்ரே காயத்தால் உயிரிழந்தார் ஸ்டிவ் இர்வின். ஹாலிவுட் வாக் ஆப் ஃபேம் பெருமை 2011 ஆம் ஆண்டு இர்வினுக்கு வழங்கப்பட்டது.

முதலைகள் மற்றும் ஊர்வன வகைகளை பாதுகாப்பதிலும் ஆராய்வதிலும் தன் வாழ்வின் பெரும் பகுதியை இர்வின் செலவிட்டார். அப்படிபட்ட ஒருவரை கௌரவிக்கும் விதமகவே இன்றைய கூகுள் டூடுள் அமைக்கப்பட்டுள்ளது.

.