கொரோனா நோய் தொற்று - உலக அளவில் 1,50,000-க்கும் அதிகமானோர் பலி

வெள்ளிக்கிழமை மாலை 7 மணி நிலவரப்படி, உலக முழுக்க 1,50,142 பேர் கொரோனா காரணமாக இறந்துள்ளனர்

கொரோனா நோய் தொற்று - உலக அளவில் 1,50,000-க்கும் அதிகமானோர் பலி

உலக அளவில் அமெரிக்காவில் தான் 34,575 பேர் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது

ஹைலைட்ஸ்

  • பலியானவர்களின் எண்ணிக்கை சுமார் 1,50,000-ஐ தாண்டியுள்ளது
  • சுமார் 193 நாடுகளில் 2,207,730 பேர் இந்த கொரோனா
  • சுமார் 483,000 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக
Paris, France:

தொடர்ந்து பரவி  வரும் கொரோனா நோய் தொற்று காரணமாக, உலக அளவில் பலியானவர்களின் எண்ணிக்கை சுமார் 1,50,000-ஐ தாண்டியுள்ளது என்று ஏ.எப்.பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை மாலை 7 மணி நிலவரப்படி, உலக முழுக்க 1,50,142  பேர் கொரோனா காரணமாக இறந்துள்ளனர். அதில் மூன்றில் இரண்டு பங்காக 96,721 பேர் ஐரோப்பியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியான அறிக்கையின்படி உலக அளவில் அமெரிக்காவில் தான் 34,575 பேர் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது.

உலக சுகாதார மையம் மற்றும் ஏ.எப்.பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், உலக அளவில் சுமார் 193 நாடுகளில் 2,207,730 பேர் இந்த கொரோனா நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் உலகின் பல நாடுகள் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் மக்களை மட்டுமே சோதனை செய்து வருவதால், வெளியான இந்த அறிக்கையில் சிறிதளவு மாற்றம் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

இதுவரை உலக அளவில் சுமார் 483,000 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக கருதப்படுகிறது. அமெரிக்காவுக்குப் பிறகு, அதிக இறப்புகளைப் பதிவுசெய்துள்ள நாடுகளாக இத்தாலியில் 22,745 பேரும், ஸ்பெய்னில் 19,478 பேரும், பிரான்சில் 18,681 பேரும் பலியாகியுள்ளனர்.