பீகார் சட்டமன்ற தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டோர் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி!

முன்னதாக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்தது. அதிகப்படியான கொரோனா பாதிப்பால் தேர்தல் ஜூன் மாதம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

பீகார் சட்டமன்ற தேர்தல் அக்டோபர் - நவம்பரில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைலைட்ஸ்

  • பீகாரில் அக்டோபர் - நவம்பரில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது
  • 65 வயதுக்கு மேற்பட்டோர் தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்
  • தேர்தல் ஆணையத்தின் முடிவு மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்க வாய்ப்பு
New Delhi:

பீகார் சட்டமன்ற தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலமாக வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகார் சட்டமன்ற தேர்தல் அக்டோபர் - நவம்பரில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பாதிப்பும் குறையாமல் இருப்பதால் திட்டமிட்டபடி பீகார் தேர்தல் அக்டோபர் - நவம்பரில் நடத்தப்படுமா என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது. 

இந்த சூழலில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களை கொரோனா பாதிப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் உயிரிழப்பு வீதம் அதிகமாக இருப்பதால், அவர்களுக்கு மட்டும் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் சலுகையை அறிவித்திருக்கிறது.

பொதுவாக கொரோனா வைரஸ் 60 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், நீண்ட நாள் நோய் பாதிப்பில் இருப்பவர்கள், சிறுநீரக, இதய பிரச்னை உள்ளவர்கள், சர்க்கரை வியாதி உடையோர் ஆகியோரை எளிதில் தாக்கி விடும். இப்படிப்பட்டவர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 

எனவே, கொரோனா எளிதில் தாக்கும் ஆபத்து உள்ளவர்கள் வெளியே செல்லக்கூடாது என மருத்துவ வல்லுனர்களும், அரசும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். 

முன்னதாக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்தது. அதிகப்படியான கொரோனா பாதிப்பால் தேர்தல் ஜூன் மாதம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.