This Article is From Jun 25, 2018

அந்நிய செலாவணி மோசடி வழக்கு ஆவணங்களை டிடிவி தினகரனுக்கு அளிக்க நீதிமன்றம் அனுமதி

டிடிவி தினகரன் அளித்த மனுவில், வழக்கின் குறிப்பிட்ட சில ஆவணங்களை தனக்கு தர மறுப்பதாக தெரிவித்திருந்தார்.

அந்நிய செலாவணி மோசடி வழக்கு ஆவணங்களை டிடிவி தினகரனுக்கு அளிக்க நீதிமன்றம் அனுமதி
சென்னை: 1996ஆம் ஆண்டில் அமலாக்க துறையினர் டிடிவி தினகரன் மீது தொடர்ந்த அந்நிய செலாவணி வழக்கின் ஆவணங்கள் நகலை டிடிவி தினகரனுக்கு வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஆவணங்களின் நகலை கேட்டு டிடிவி தினகரன் கொடுத்த மனுவை ஏற்று, சென்னை உயர்நீதிமன்றம் இன்று பதிலளித்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளிதரன், ஆவணங்களின் நகலை மனுதாரருக்கு அளிக்குமாறு உத்தரவிட்டார்.

டிடிவி தினகரன் அளித்த மனுவில், வழக்கின் குறிப்பிட்ட சில ஆவணங்களை தனக்கு தர மறுப்பதாக தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து அமலாக்க பிரிவினர் அளித்த விளக்கத்தில், அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின் படி, அமலாக்க துறையின் ஆவணங்கள் மற்றும் தகவல்களை பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, எந்த ஆவணங்களையும் அளிக்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல், இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் ஒரு கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக சேமித்து வைத்திருந்த அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதற்காக டிடிவி தினகரன் மீது 1996 ஆம் ஆண்டு அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.