This Article is From Sep 26, 2018

இரு பெண்கள் சேர்ந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு

ஸ்ரீஜாவுடன் சேர்ந்து வாழவே தாம் விரும்புவதாக அருணா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்

இரு பெண்கள் சேர்ந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு

ஓரினச்சேர்க்கை குற்றமாகாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்

Kochi:

கேரளா மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஶ்ரீஜா. இவரும், பலராமபுரம் பகுதியைச் சேர்ந்த அருணா என்பவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், அருணாவின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால், கேரளா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ள ஶ்ரீஜா, வலுக்கட்டாயமாக அருணாவை வீட்டில் அடைத்து வைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஓரினச்சேர்க்கை குற்றமாகாது என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் சுட்டிக்காட்டியுள்ளார்

எனவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து அருணாவை காவல்துறையினர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை நீதிபதிகள் அப்துல், நாராயண பிஷரோடி ஆகியோர் கொண்ட குழு விசாரித்தது. அப்போது ஸ்ரீஜாவுடன் சேர்ந்து வாழவே தாம் விரும்புவதாக அருணா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

.