This Article is From Feb 19, 2020

அதிசயம்!! கொடை மிளகாய்க்குள் உயிருடன் இருந்த தவளை!

தம்பதியினர் கொடை மிளகாய்க்குள் பச்சை மற தவளை இருப்பதை கண்டுள்ளனர்.

அதிசயம்!! கொடை மிளகாய்க்குள் உயிருடன் இருந்த தவளை!

கொடை மிளகாய்க்குள் பச்சை மற தவளை உயிருடன் இருப்பதை தம்பதியினர் கண்டுள்ளனர். (Representative Image)

கனடாவை சேர்ந்த தம்பதியினர் கடந்த வாரம் தங்களது இரவு உணவை சமைத்து கொண்டிருந்த போது, கொடை மிளகாய் ஒன்றுக்குள் பச்சை மற தவளை உயிருடன் இருப்பதை கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர். 

கியூபெக்கின் சாகுனே பகுதியை சேர்ந்தவர்கள் நிக்கோலே காக்னான் மற்றும் ஜெரார்டு பிளாக்பர்ன் தம்பதியினர், கடந்த பிப்.9ம் தேதியன்று தங்களது இரவு உணவுக்கான சமையலில் ஈடுபட்டிருந்த போது, காக்னான் காய்கறிகளை வெட்டிகொண்டு இருந்துள்ளார். அப்போது தான் இந்த அதிசயம் அவருக்கும் தெரியவந்துள்ளது என ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இதையடுத்து, அந்த தம்பதியினர் கொடை மிளகாய்க்குள் பச்சை மற தவளை இருந்தது குறித்து கியூபெக்கின் வேளாண்மை, மீன்வளம், உணவக அமைச்சகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

அவர்களின் இந்த விசித்திரமான கண்டுபிடிப்பு சமூகவலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து, சில எதிர்வினைகளும், சில திகிலுட்டும் அனுபவங்கள் குறித்த தகவல்களும் பரவி வருகின்றன.

ஒரு பயனர், தான் ஒரு முழு மிளகுக்குள் பெரிய மண் புழுவை கண்டதாகவும். அது மிகவும் மாசற்ற மிளகு ஆகும் என்றும்  கூறியவர், நான் ஒவ்வொரு முறையும் மிளகை உடைக்கும் போதும், ஏதேனும் ஆச்சரியத்திற்காக காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த தவளைகள் அடிப்படையில் பிளோட்டோவின் குகையின் உருவமாக வாழ்கிறது என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

மற்றொரு பயனர், ஒருமுறை தான் வாழைப்பழ தோலை உரிக்கும் போது, அதில் பூரான் இருந்ததாகவும், இதனையடுத்து, இரண்டு வருடங்களுக்கு தான் வாழைப்பழமே சாப்பிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.