This Article is From Mar 23, 2020

கோவிட் -19: இந்த மாதம் ரயில்கள், பேருந்துகள், மெட்ரோக்கள் இயங்காது

ஏற்கனவே 1,000 க்கும் மேற்பட்ட ரயில்களை ரத்து செய்துள்ள ரயில்வே, மார்ச் 31 வரை பயணிகள் ரயில் சேவையை நிறுத்துவதாகக் கூறியுள்ளது.

கோவிட் -19: இந்த மாதம் ரயில்கள், பேருந்துகள், மெட்ரோக்கள் இயங்காது

கொரோனா வைரஸ்: பயணிகள் ரயில் சேவையை மார்ச் 31 வரை நிறுத்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

New Delhi:

இந்தியாவில் 350 பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பதோடு மட்டுமல்லாமல், ஆறு பேர்  கொரோனாவால் இறந்துள்ளனர். இந்த தொற்று பரவலை முறியடிக்க ரயில்வே, மெட்ரோ மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் விரைவில் நிறுத்தப்படும் என்பதால் நாடு விரைவில் முடங்கப்பட உள்ளது. ஏற்கனவே 1,000 க்கும் மேற்பட்ட ரயில்களை ரத்து செய்துள்ள ரயில்வே, மார்ச் 31 வரை பயணிகள் ரயில் சேவையை நிறுத்துவதாகக் கூறியுள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான இடைநிலை பேருந்துகள் மற்றும் மெட்ரோ சேவைகள் ஒரே விரைவில் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்கள் பொதுப் போக்குவரத்து, மால்கள் மற்றும் கடைகளை முழுமையாக மூடியுள்ளது. 

  1. இன்று காலை நடந்த கூட்டத்தில், பயணிகள் ரயில் சேவையை மார்ச் 31 வரை நிறுத்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
  2. பல்வேறு நகரங்களில் உள்ள மெட்ரோ சேவைகளும், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகளும் ஒரே அட்டவணையைப் பின்பற்றும். புறநகர் ரயில்கள் இன்று இரவு வரை இயங்கும்.
  3. ஏற்கனவே செல்லும் பயணிகள் ரயில்கள் தங்கள் இலக்கை அடைய அனுமதிக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
  4. "நாட்டின் பல்வேறு பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, சரக்கு ரயில்களின் இயக்கம் தொடரும்" என்று ரயில்வேயின் ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.
  5. மத்திய மற்றும் மாநிலத்தின் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட, நிலைமை பற்றிய மறு ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த அரசாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  6. கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையானது, "அத்தியாவசியமற்ற பயணிகள் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அவசரத் தேவை இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது.
  7. இதுவரை, மார்ச் 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ரயில்களில் பயணித்த 12 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
  8. சர்வதேச விமானங்கள் ஏற்கனவே ஒரு வாரத்திற்குத் தடை செய்யப்பட்டுள்ளன, மேலும் பல விமான நிறுவனங்கள் விமான போக்குவரத்தினை குறைப்பது குறித்துப் பேசியுள்ளன.
  9. அகமதாபாத், சூரத், ராஜ்கோட் மற்றும் வதோதரா ஆகிய நான்கு நகரங்கள் புதன்கிழமை வரை பூட்டப்படுவதாகக் குஜராத் அரசு அறிவித்துள்ளது. காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் மட்டுமே திறந்திருக்கும்.
  10. தினசரி ஊதியம் பெறுபவர்கள் நகரங்களில் இருந்து கிராமங்களுக்குச் செல்வதைத் தடுக்க பல மாநிலங்கள் பஸ் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளன. "எனது சகோதர சகோதரிகள் பலர் அவர்கள் சம்பாதிக்கும் நகரத்தை விட்டு வெளியேறி தங்கள் கிராமங்களுக்குத் திரும்பி வருகிறார்கள். மக்கள் நெரிசலில் பயணம் செய்வது COVID19 நோய்த்தொற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. நீங்கள் எங்குச் சென்றாலும் அது நடக்கும் அங்குள்ள மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். இது அவர்களுக்குச் சிரமங்களை அதிகரிக்கும். " என்று நேற்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்திருந்தார்.

.