This Article is From Apr 04, 2020

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 411-ஆக உயர்வு!!

நேற்று பாதிப்பு எண்ணிக்கை 309- ஆக இருந்த நிலையில் இன்று மேலும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 411-ஆக உயர்வு!!

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411-ஆக உயர்வு
  • நேற்று 309- இருந்த எண்ணிக்கை இன்று 102 அதிகரித்துள்ளது
  • பாதிப்பு குறித்த விவரத்தை அமைச்சர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 411-ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிப்பு எண்ணிக்கை 309- ஆக இருந்த நிலையில் இன்று மேலும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-

தமிழகத்தில் இதுவரையில் மொத்தம் 3,684 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 2,789 பேருக்கு கொரோனா தொற்று இல்லை.

மொத்தம் 411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 484 பேரின் சோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.

தமிழகத்தில் மொத்தம் 23,689 படுக்கைகள் கொண்ட வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. 3,396 வென்டிலேட்டர்கள் உள்ளன. மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 1,580 பேர் அட்மிட் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.

நேற்றைய நிலவரப்படி மொத்தம் 309 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இவர்களில் 264 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள்.

கொரோனா பாதித்தவர்களில் இதுவரைக்கும் 7 பேர் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கும் அளவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் யாரும் செல்லவில்லை என்று சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

.