This Article is From Jul 30, 2020

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 52,000ஐ கடந்தது!

Coronavirus: நோயால் பாதிப்படைந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 52,000ஐ கடந்தது!

Coronavirus: இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 52,000ஐ கடந்தது!

New Delhi:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 50,000ஐ கடந்துள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 52,123 ஆக பதிவாகியுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 15,83,792 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 775 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 34,968 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், நோயால் பாதிப்படைந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை 10,20,582 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைபவர்களின் விகிதமானது 64.43 சதவீதமாக உள்ளது. இதுவரை 1,81,90,382 மாதிரிகள் சோதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரு நாளில் மட்டும் 4,46,642 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. 

மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளை பதிவு செய்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மொத்த பாதிப்புகளில் 66.41 சதவீதம் ஆந்திரா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவை என்று அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் கடந்த 24 மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளன.

இந்தியாவின் மிகப் பெரிய சேரிகளில் வாழும் 10 பேரில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான நோய்எதிர்ப்பு சக்தி உள்ளது. இதனால், அவர்கள் தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளதாக தெரிகிறது, இது உலகளவில் அறியப்பட்ட மிக அதிக மக்கள் தொகை நோய் எதிர்ப்பு சக்தி அளவுகளில் ஒன்றாகத் தோன்றுகிறது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

இரவு ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டு, கட்டுப்பாட்டு மண்டலங்கள் இல்லாத பகுதிகளில் ஜிம்கள் மற்றும் யோகா மையங்களை அன்லாக் 3ல் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான மூன்றாவது அன்லாக் நேற்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தவிர்த்து, ஏழு பாஜக மற்றும் இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உட்பட ஒன்பது எம்எல்ஏக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஆளுநர் லால்ஜி டாண்டனின் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள லக்னோவுக்கு சென்ற நான்கு பாஜக தலைவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் நேற்றைய தினம் ஒரு புதிய மைல்கல்லைக் எட்டியது, அதன் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் 150,000ஐ தாண்டியது - இது வேறு எந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நாட்டிலும் ஏற்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. வழக்குகள் மற்றும் இறப்புகளின் அடிப்படையில் பிரேசில் அமெரிக்காவிற்கு இரண்டாவது இடத்தில் உள்ளது, மேலும் இது 90,000 இறப்புகளைத் தாண்டியதால் ஒரு மோசமான எண்ணிக்கையையும் தெரிவித்துள்ளது.

.