This Article is From Jul 15, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 29,000 பேர் பாதிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 582 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கிட்டதட்ட 6 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 

இந்தியாவில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 29,000 பேர் பாதிப்பு!

Coronavirus, India: இந்தியாவில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 29,000 பேர் பாதிப்பு!

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் ஒரே நாளில் 29,000 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு!
  • மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 9.36 லட்சமாக உயர்வு
  • மொத்தமாக இதுவரை கொரோனா பாதிக்கப்பட்ட 24,309 பேர் உயிரிழப்பு
New Delhi:

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு கடந்த 24 மணி நேரத்தில் 29,429 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன்ர. இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 9.36 லட்சமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 29,000ஐ கடப்பது என்பது இதுவே முதல்முறையாகும். மொத்தமாக இதுவரை கொரோனா பாதிக்கப்பட்ட 24,309 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 582 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கிட்டதட்ட 6 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிமாக பதிவாகியுள்ள முதல் 5 மாநிலங்களில் மகாராஷ்டிரா (6,741), தமிழகம் (4,526), கர்நாடகா (2,496), ஆந்திர பிரதேசம் (1,916) டெல்லி (1,606) உள்ளன.

அதேபோல், இந்த 5 மாநிலங்களில் நேற்றைய தினம் கொரோனா வைரஸால் அதிகளவிலான உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. அதன்படி மகாராஷ்டிரா (213), கர்நாடகா (85), தமிழகம் (67), ஆந்திர பிரதேசம் (43) டெல்லி (35).

இந்தியாவில் 2 லட்சம் அளவிலே பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியிருந்த நிலையில், கடந்த ஜூலை 6ம் தேதியில் 7 லட்சத்தை கடந்தது. இதைத்தொடர்ந்து, உலகளவில் பாதிப்பு அதிகமுள்ள 3வது நாடாக இந்தியா உள்ளது. 

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடாக இருந்தபோதிலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் தினசரி வளர்ச்சி விகிதம் மார்ச் மாதத்தில் சுமார் 31 சதவீதத்திலிருந்து ஜூலை 12 அன்று 3.24 சதவீதமாக தொடர்ந்து குறைந்து வருவதாக சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவைர 1.24 கோடி பேர் வைர கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அதிகபட்சமாக 3,20,161 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 

உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின் படி, 31.58 லட்சம் பேர் வரை வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் சாதகமான போக்குகளைக் காட்டும் மாநிலங்களாக டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளது. உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் நிலைமை கவலை அளிக்கிறது. 

உத்தரபிரதேசம், திரிபுரா, பீகார் உள்ளிட்ட பல மாநிலங்கள் கொரோனா வைரஸின் பரிமாற்றச் சங்கிலியை உடைக்க புதிய ஊரடங்கு விதிகளை அறிவித்துள்ளன.

உலகளவில் கொரோனோ வைரஸால் 1.33 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 73 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். கிட்டதட்ட 5.78 லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சமாக உள்ளது. 

.