This Article is From Mar 13, 2020

பரவி வரும் "கொரோனா ஒரு தொற்றுநோய்" - உலக சுகாதார அமைப்பு

தற்போது இந்த நோயின் பாதிப்பால் இந்தியாவிலும் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

பரவி வரும்

விசாக்கள் வரும் ஏப்ரல் 15 வரை இடைநிறுத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

ஹைலைட்ஸ்

  • தென் கொரியா (7,755 பாதிப்பு, 60 இறப்புகள்)
  • 4,300 பேரைக் கொன்ற கொரோனா வைரஸ் ஒரு "தொற்றுநோய்"
  • WHO தலைமை அதிகாரி 'டெட்ரோஸ் அதானோம்'
New Delhi:

உலகெங்கிலும் சுமார் 4,300 பேரைக் கொன்ற கொரோனா வைரஸ் ஒரு "தொற்றுநோய்" என்று வகைப்படுத்தப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த நோய் குறித்து தாங்கள் பல வகையான ஆய்வுகளை எடுத்துள்ளதாகவும் அந்த ஆய்வுகளின் முடிவாகவே இந்த கொரோனா என்பது ஒரு தொற்றுநோயாக வகைப்படுத்தலாம் என்று" WHO தலைமை அதிகாரி 'டெட்ரோஸ் அதானோம்' ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஒரு நோயானது பெரிய அளவிலான நிலப்பரப்பில் பரவும்போதும், உதாரணமாகப் பல கண்டங்களில் பரவும்போது அது தொற்று நோய் என்று அறிவிக்கப்படுகிறது. சீனாவின் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் இதுவரை உலகளவில் 119,711 க்கும் அதிகமானவர்களுக்குப் பரவியுள்ளது.

"தொற்றுநோய் என்பது எளிதாகவோ அல்லது கவனக்குறைவுடனோ பார்க்கவேண்டிய ஒரு சொல் அல்ல. அவ்வாறு இது கவனக்குறைவுடன் பார்க்கப்படுமாயின் அது மிகப் பெரிய குழப்பங்களையும் தேவையற்ற அச்சத்தையும் ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். இதுவரை இந்த உலகம் கொரோனா வைரசை போல ஒரு தொற்று நோயைப் பார்த்ததில்லை என்றும். ஆனால் இது ஒரு கட்டுப்படுத்தக்கூடிய தொற்று நோய் என்றும் அவர் தெரிவித்தார்.


நாங்கள் எல்லா நாடுகளுக்கும் கொரோனா குறித்து கடுமையான மற்றும் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்துவதாகவும். இந்த நோய் சம்பந்தமான எச்சரிக்கை மணியை ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறோம் என்றும் WHOவின் தலைமை அதிகாரி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் முதன்முதலில் 2019 டிசம்பரின் பிற்பகுதியில் வெளிவந்ததிலிருந்து, சீனாவில் 80,778 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் சீனாவுக்குப் பிறகு மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் இத்தாலி (10,149 பாதிப்பு, 631 இறப்புகள்), ஈரான் (9,000 பாதிப்பு, 354 இறப்புகள்), தென் கொரியா (7,755 பாதிப்பு, 60 இறப்புகள்) மற்றும் பிரான்ஸ் (1,784 பாதிப்பு, 33 இறப்புகள்). தற்போது ஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 2,000 ஐத் தாண்டிவிட்டது, மேலும் 47 பேர் இறந்துள்ளதால் பிரான்சை நாட்டின் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அளவை விட அதிகரித்துள்ளது.

தற்போது இந்த நோயின் பாதிப்பால் இந்தியாவிலும் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவுக்கான அனைத்து விசாக்களையும் அரசாங்கம் கடந்த புதன்கிழமை அன்று நிறுத்தியது. மேலும், உத்தியோகபூர்வ விசா, வேலைவாய்ப்பு, ப்ராஜெக்ட் விசாக்கள் என்று பலவகை விசாக்கள் வரும் ஏப்ரல் 15 வரை இடைநிறுத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

.