This Article is From Mar 25, 2020

கொரோனா அச்சுறுத்தலால் ரேஷன் பொருட்கள் ஹோம் டெலிவரி!! வழிகாட்டும் ஸ்ரீநகர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் ரேஷன் பொருட்கள் ஹோம் டெலிவரி!! வழிகாட்டும் ஸ்ரீநகர்!

இந்தியாவில் 600-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • ரேஷன் பொருட்கள் வீடு தேடிசென்று வழங்கப்படும் என்கிறது ஸ்ரீநகர் நிர்வாகம்
  • மார்ச் 28 முதல் 1.60 லட்சம் வீடுகளுக்கு ரேஷன் பொருள் வழங்கப்படவுள்ளது
  • அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைக்கும் என்று அரசு உறுதியளித்துள்ளது
Srinagar:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரேஷன் பொருட்கள் ஹோம் டெலிவரி செய்யப்படும் என்று ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மளிகைக்கடைகள், பால், காய்கறிக் கடைகள் போன்ற அத்தியாவசிய நிறுவனங்கள் திறந்திருக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், ஏழை எளிய மக்கள், ரேஷன் பொருட்களை நம்பியிருப்போர் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ள கடைக்கு வந்தால் கூட்டம் கூடும். இதனால் கொரோனா பரவும் என்ற அச்சம் எழுந்துள்ளது. 

இந்த சூழலில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் 1.60 லட்சம் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் டோர் டெலிவரி செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது மார்ச் 28-ம்தேதி முதற்கொண்டு நடைமுறைக்கு வருகிறது. 

கொரோனா தொற்று பரவால் இருப்பதற்காக கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் ரேஷன் பொருட்கள் பெரிய குழாயின் வழியே வழங்கப்படுகிறது. 

கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 600-யை தாண்டியுள்ளது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.