கொரோனா சந்தேகம்; உயிரிழந்த தந்தையை கடைசியாக சந்திக்க மகளுக்கு 3 நிமிட அவகாசம்!

கடைசியாக தனது தந்தையை சந்திக்க அந்த பெண் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, முழு பாதுகாப்பு உடைகளுடன், தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளார். 

கொரோனா சந்தேகம்; உயிரிழந்த தந்தையை கடைசியாக சந்திக்க மகளுக்கு 3 நிமிட அவகாசம்!

கொரோனா சந்தேகம்; உயிரிழந்த தந்தையை கடைசியாக சந்திக்க மகளுக்கு 3 நிமிட அவகாசம்!

Kangpokpi:

மணிப்பூரில் கொரோனா தொற்று இருக்கலாம் என்று சந்தேகத்தால் தனிமைப்படுத்தப்பட்ட பெண் ஒருவர், உயிரிழந்த தனது தந்தையை கடைசியாக சந்திக்க 3 நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. .

இதுதொடர்பாக மனதை உருக்கும் அளவில் நடந்த பாசப்போரட்ட காட்சிகள், கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்த பெண், தனது தந்தையை வைத்துள்ள சவப்பெட்டி அருகே சென்று, எட்டிப் பார்க்கிறார். ஆனால், அங்கிருக்கும் அவருடைய தாய், உறவினர்கள் உள்ளிட்ட யாரும் அந்த பெண்ணுக்கு அருகில் சென்று அவரை ஆறுதல்படுத்த முடியவில்லை. அவருக்கு அருகில் நிற்கும் மருத்துவர்கள் கைக்கடிகாரத்தை பார்த்தப்படியே நிற்கின்றனர். ஒதுக்கப்பட்ட மூன்று நிமிடங்கள் முடிந்தவுடன் அவர் சுகாதார அதிகாரிகளால் அங்கிருந்து அழைத்துச்செல்லப்படுகிறார். 

அஞ்சலி ஹமாங்தே என்ற அந்த 22 வயது பெண் கடந்த மே.25ம் தேதி சென்னையில் இருந்து ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலம் மணிப்பூர் வந்துள்ளார். தொடர்ந்து, ரயிலில் அவருடன் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த பெண்ணுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக இம்பாலில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார். 

இதனிடையே, நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அந்த பெண்ணின் தந்தை திடீரென உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து, கடைசியாக தனது தந்தையை சந்திக்க அந்த பெண் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, முழு பாதுகாப்பு உடைகளுடன், தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளார். 

மனிப்பூரில் நேற்றை தினம் மட்டும் புதிதாக 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 121ஆக அதிகரித்துள்ளது என மாநில அரசு தெரிவித்துள்ளது.