This Article is From Apr 07, 2020

சைக்கிள் வாங்க சேமித்து வைத்திருந்த ரூ. 971-யை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்த 4 வயது சிறுவன்!!

சிறுவனிடம் கொரோனா நிவாரண உதவித் தொகையைப் பெற்றுக் கொண்ட அமைச்சர், சிறுவனுக்கு சைக்கிள் ஒன்றை பரிசாக அளிப்பேன் என உறுதி அளித்துள்ளார்.

சைக்கிள் வாங்க சேமித்து வைத்திருந்த ரூ. 971-யை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்த 4 வயது சிறுவன்!!

அமைச்சர் பெர்னி வெங்கடராமையாவிடம் நிதியை வழங்கும் ஹேமந்த்.

ஹைலைட்ஸ்

  • கொரோனா நிவாரண நிதியாக ரூ. 971 யை 4 வயது சிறுவன் வழங்கியுள்ளான்
  • சைக்கிள் வாங்க சேமித்த பணத்திலிருந்து வழங்கியுள்ளான் சிறுவன்
  • சிறுவனுக்கு சைக்கிள் வாங்கி பரிசளிப்பதாக ஆந்திர அமைச்சர் உறுதி
Amaravati:

சைக்கிள் வாங்க சேமித்து வைத்திருந்த ரூ. 971-யை 4 வயது சிறுவன் ஒருவன், கொரோனா நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். சிறுவனின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கண்ணுக்கு தெரியாத கிருமியான கொரோனா, இன்று வல்லரசு நாடுகளை ஆட்டம் காணச்செய்து வருகிறது. இதனால் உலகம் முழுவதும் சுமார் 80 ஆயிரம்பேர் உயிரிழந்துள்ள நிலையில், பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே மத்திய மாநில அரசுகள் சார்பாக கொரோனா நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த 4 வயது சிறுவன் ஹேமந்த், தான் சைக்கிள் வாங்க சேமித்து வைத்திருந்த ரூ. 971-யை கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளார்.

இந்த தொகையை வாங்கிக் கொண்ட அமைச்சர் பெர்னி வெங்கடராமையா, சிறுவன் விரும்பிய சைக்கிளை பரிசாக அளிப்பதாக உறுதியளித்துள்ளார். 

4 வயது சிறுவனின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,789 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 124 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மட்டும் 704 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் எண்ணிக்கை இன்று 508 ஆக குறைந்துள்ளது. 

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா அதிகம் பாதிக்கப்படவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்திருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 லிருந்து 690-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

.