This Article is From Apr 01, 2020

டெல்லி மதக் கூட்டத்தில் கலந்து கொண்ட நுற்றுகணக்கானோருக்கு கொரோனா: 10 முக்கிய தகவல்கள்

ஞாயிற்றுக்கிழமை மட்டும் டெல்லியில் 441கொரோனா தொற்று அறிகுறிகளைக் கொண்டவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். 1100க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், இந்த கொள்கை பரப்பு கூட்டத்தின் கூட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி முதல்வர் பரிந்துரை செய்திருந்தார்.

India COVID-19 Cases: நிஜாமுதீன் மர்காஸ் சீல் வைக்கப்பட்டது.

ஹைலைட்ஸ்

  • 800 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
  • மதக் கூட்டத்தில் கலந்துகொண்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • 2000 பேர் வரை தங்கியிருந்த அந்த மசூதியில் 300 பேருக்கு அறிகுறி
New Delhi:

சமீபத்தில் மார்ச் 8-10 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் என்கிற இஸ்லாமியக் கொள்கை பரப்பு கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் தற்போது கொரோனா வைராஸ் நூற்றுக்கணக்கில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தெலுங்கானாவில் இறந்த ஆறு பேர் மற்றும் காஷ்மீரில் இறந்த ஒருவர், இந்த கொள்கை பரப்புக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தப்லீக் ஜமாத் குழுவின் டெல்லி தலைமையகமான "மார்க்காஸ் நிஜாமுதீன்" லிருந்து நாடுமுழுவதும் கிட்டதட்ட 1900 பேர் பயணித்திருக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் டெல்லியில் 441கொரோனா தொற்று அறிகுறிகளைக் கொண்டவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். 1100க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், இந்த கொள்கை பரப்பு கூட்டத்தின் கூட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி முதல்வர் பரிந்துரை செய்திருந்தார். இந்த நிலையில் மசூதி நிர்வாகம் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கின்றது. மேலும், இந்த கொள்கை பரப்பு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற தப்லீக் உறுப்பினர்களைக் கண்டுபிடிக்க உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  1. மார்ச் 8-10 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் என்கிற இஸ்லாமியக் கொள்கை பரப்பு கூட்டத்தில் 50 பேர் தமிழ்நாட்டிலும், டெல்லியில் 24, தெலுங்கானாவில் 21, ஆந்திராவில் 18, அந்தமான் 10 மற்றும் அசாம் மற்றும் காஷ்மீரில் தலா ஒரு தேர்வில் கலந்து கொண்டுள்ளனர். மேலும், இதில் பங்கேற்ற 824 வெளி நாட்டினர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குப் பயணித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இவர்கள் குறித்த விவரங்களை காவல்துறையிடம் வழங்கியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
  2. செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதார துறையின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் “இது தவறை கண்டறிவதற்கான நேரம் அல்ல. நாம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்துக் கண்டறிந்திருக்கின்றோம். பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக எங்கள் கட்டுப்பாட்டு செயல்முறைக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பதே எங்களுக்கு முக்கியமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
  3. மார்ச் 8 அன்று தப்லீக் ஜாமத் என்கிற இஸ்லாமியக் கொள்கை பரப்பு கூட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான மக்கள் 100 ஆண்டு பழமையான ஆறு மாடி கொண்ட மசூதி வளாகத்தில் தங்கியிருந்தனர். இது சமூக விலகலைக் கேள்விக்குறியாக மாற்றினாலும், மார்ச் 16-ம் தேதிதான் டெல்லி முதல்வர் 50 பேருக்கு மேல் கூட்டம் கூடக்கூடாது என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உள்துறை அமைச்சகத்தின் தகவல் படி, மார்ச் 21 அன்று இந்த மசூதியில், 216 வெளிநாட்டவர்களோடு சேர்த்து, 1962 பேர் இருந்ததாக தெரிய வருகிறது.
  4. தப்லீக் ஜமாத்தின் கூட்டத்தில் பங்கேற்ற 2137 உறுப்பினர்கள் வெவ்வேறு மாநிலங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை மருத்துவ ரீதியாக ஆய்வு செய்து தனிமைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அரசு கூறுகிறது. தெலுங்கானா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மற்றும் அந்தமான் ஆகிய நாடுகளுக்குத் திரும்பிய தப்லீக் ஜமாத் உறுப்பினர்களைத் தேடி வருகின்றனர்.
  5. கொரோனா தொற்றால் தெலுங்கானாவில் இறந்த ஆறு பேர் மற்றும் காஷ்மீரில் இறந்த ஒருவர், இந்த கொள்கை பரப்புக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. காஷ்மீரில் இறந்த நபர் முன்னதாக உ.பி.யில் உள்ள தியோபந்த் இஸ்லாமியக் கல்லூரிக்குச் சென்றிருந்தார். மேலும், அந்தமான் நிக்கோபார் தீவுகளிலிருந்தது வந்த 10 பேருக்கு தொற்று இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1800 பேர் அந்தமானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். காஷ்மீரிலிருந்து 100 பேர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருக்கின்றனர். அதையடுத்து ஆந்திராவிலிருந்து இதில் பங்கேற்ற 700 உறுப்பினர்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.
  6. 1962-ல் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்டு, உருவாக்கப்பட்டதுதான் தப்லீக் ஜமாத். இது ஒரு இஸ்லாமிய கொள்கை பரப்புக் கூட்டமாக மார்ச் 8-10 தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது. மலேசியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் நடைபெற்ற இதே போன்ற நிகழ்வுகளில் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது.
  7. இந்த நிகழ்ச்சியில், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஜிபூட்டி, இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, பிஜி, பிரான்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  8. கிட்டதட்ட 300 பேர் சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்து மத அடிப்படை நிகழ்ச்சிகளை கலந்துகொண்டு விசா விதி மீறலில் ஈட்டுப்பட்டுள்ளனர். இவர்கள் மீது அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றது. மேலும், தப்லீக் ஜமாஅத் நடவடிக்கைகளில் பங்கேற்க விரும்பும் எந்தவொரு வெளிநாட்டினருக்கும் சுற்றுலா விசா வழங்க வேண்டாம் என்றும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  9. தெலுங்கானாவில் மார்ச் 20 அன்று இந்தோனேசியாவைச் சேர்ந்த 10 தப்லீக் உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டெல்லி மசூதியில் 1200 பேர் தங்கியிருந்தனர். அதில் கணிசமானோர் விமான நிலையத்திற்கு சென்றதாகவும், பிரதமரின் முழு முடக்க நடவடிக்கைக்கு பின்பு அவர்கள் அவர்கள் மீண்டும் மசூதிக்கே திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் மசூதியை காவல்துறையின் கண்டறிந்த போது அங்கு கிட்டதட்ட 2000 இருந்ததாக காவல்துறையின் குறிப்பிட்டுள்ளனர்.
  10. பிரதமரின் மக்கள் ஊரடங்கு மார்ச் 22 அன்று பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவு வந்த பின்பு தாங்கள் நிகழ்வுகளை ரத்து செய்து விட்டதாக குறிப்பிட்டிருந்தனர். மக்கள் ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட முழு முடக்க உத்தரவின் காரணமாக இந்து குவிந்த மக்கள் வெளியேற வழியின் தவித்திருக்கின்றனர். மேலும், அவர்கள் டெல்லி அரசாங்கத்திடம் இடத்தினை காலி செய்ய எழுத்துப்பூர்வமான உதவியை கோரியதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் முழு முடக்க நடவடிக்கைக்கு முன்பே டெல்லி அரசு மத மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நிறுத்தி வைக்க அழைப்பு விடுத்திருந்ததை அம்மாநில அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

.