This Article is From Apr 28, 2020

லேசான கொரோனா அறிகுறி கொண்டவர்கள் வீட்டிலே தனிமைப்படுத்திக்கொள்ளலாம்: விதிமுறைகள் விவரம்

Coronavirus India: வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ள கொரோனா நோயாளிகள் அரசு கண்காணிப்பு அதிகாரியுடனும், ஒரு மருத்துவமனையுடன் தொடர்பில் இருக்க வேண்டும், அத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ள நோயாளியைப் பராமரிக்க ஒரு பராமரிப்பாளர் 24 மணி நேரமும் உடன் இருப்பார்.

ஹைலைட்ஸ்

  • Union Health Ministry has issued fresh guidelines on home isolation
  • The patients must also download government's Arogya Setu app
  • A caregiver should be available 24x7 to care for the patient
New Delhi:

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான மிக லேசான அறிகுறிகளை கொண்டவர்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என்றும், அதற்கான புதிய வழிகாட்டுதல்களையும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தற்போது, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா வார்டுகளில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், லேசான கொரோனா அறிகுறி கொண்டவர்கள், தங்களை தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளும் வசதிகள் இருக்கும்பட்சத்தில் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ள கொரோனா நோயாளிகள் அரசு கண்காணிப்பு அதிகாரியுடனும், ஒரு மருத்துவமனையுடன் தொடர்பில் இருக்க வேண்டும். அத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என சுகாதாரா அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

வீட்டு தனிமைப்படுத்தலுக்கு யார் தகுதியானவர்கள்?

* மருத்துவமனையில் லேசான அறிகுறி உள்ளவர்கள் என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டால், அந்த நபர் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கலாம். 


* அதேபோல், லேசான அறிகுறி உள்ள நபர்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளும் வசதிகள் இருப்பவர்கள். 


* வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ள நோயாளியைப் பராமரிக்க ஒரு பராமரிப்பாளர் 24 மணி நேரமும் உடன் இருப்பார். 


* இதேபோல், பராமரிப்பு பணியில் ஈடுபடுபவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.


* ஆரோக்யா சேது செயலியை மொபைல்களில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தொடர்ந்து அந்த செயலி செயல்பாட்டிலேயே இருக்க வேண்டும்.


* அந்த நபர் தனது உடல்நிலையை கண்காணிக்க ஒப்புக் கொள்ள வேண்டும். மேலும் கண்காணிப்பு குழுக்களால் தொடர்ந்து பின்தொடரப்பட்டு, அவர்களின் உடல்நிலை குறித்த தகவல்களை மாவட்ட கண்காணிப்பு அதிகாரியிடம் தவறாமல் வழங்க வேண்டும்.




எப்போது மருத்துவர்களை சந்திக்க வேண்டும்?



* நோயாளி அல்லது பராமரிப்பாளர் அவர்களின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

*கடுமையான அறிகுறிகள் தோன்றினால் அவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.

* சுவாசிப்பதில் சிரமம்


* மார்பில் தொடர்ந்து வலி அல்லது அழுத்தம்


* மன குழப்பம் அல்லது செயல்பட இயலாமை


* உதடுகள் அல்லது முகத்தின் நீல நிறமாற்றங்கள் உருவாகுதல் உள்ளிட்ட அறிகுளிகளின் போது மருத்துவரை அணுக வேண்டும்.


வீட்டு தனிமைப்படுத்தலை எப்போது நிறுத்த வேண்டும்?

வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ள நோயாளிகளின் அறிகுறிகள் மருத்துவ ரீதியாக தீர்க்கப்பட்டால், கண்காணிப்பு மருத்துவ அதிகாரி ஆய்வக சோதனை முடிந்தபின் தொற்றுநோயிலிருந்து விடுபட்டதாக மருத்துவ அதிகாரி சான்றளிப்பார். அதன் பின்னர் தனிமைப்படுத்ததலை நிறுத்திக் கொள்ளலாம்.
 

.