This Article is From Mar 07, 2020

கொரோனா பீதி: பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

எந்தவொரு பெரும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டாலும், முன்னெச்சரிக்கைகள் குறித்து அமைப்பாளர்களுக்கு வழிகாட்டுமாறு சுகாதார அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா பீதி: பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

ஆக்ராவில் தெர்மல் ஸ்கிரினிங் சோதனைக்கு உட்படுத்தப்படும் சுற்றுலா பயணிகள்

New Delhi:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, பொது இடங்களில் மக்கள் பெருமளவில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

இதேபோல், எந்தவொரு பெரும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டாலும், முன்னெச்சரிக்கைகள் குறித்து அமைப்பாளர்களுக்கு வழிகாட்டுமாறு சுகாதார அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 31 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, தலைதூக்கி வரும் கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் இருக்க பெரும் கூட்டங்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

அதனால், கூட்டம் கூடுவதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். இதனை நோய் பரவுவது குறையும் வரை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. 

அப்படி, எந்தவொரு பெரும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டாலும், முன்னெச்சரிக்கைகள் குறித்து அமைப்பாளர்களுக்கு வழிகாட்டுமாறு சுகாதார அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.

.