தமிழகத்தில் 4.15 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 6,352 பேருக்கு தொற்று!!

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 6,352 நபர்களில் 1,285 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

தமிழகத்தில் 4.15 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 6,352 பேருக்கு தொற்று!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4.15 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 80,988 மாதிரிகளில் 6,352 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 30 நாட்களாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியிருந்த நிலையில் தற்போது மீண்டும் 6 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் ஒட்டு மொத்த பாதிப்பு 4,15,988 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 6,045 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,55,727 ஆக அதிகரித்துள்ளது. இன்று 87 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமான உயிரிழப்பு பதிவாகியிருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 100க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 7,137 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,726 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 6,352 நபர்களில் 1,285 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,33,173 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,712 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 17 பேர் உயிரிழந்துள்ளனர்.