This Article is From Mar 15, 2020

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 107 ஆக உயர்வு

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 31 எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். புதியதாக 14 பேர் இம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். கேரளாவில் 22 மற்றும் உத்தரப்பிரதேசம் 11 என பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 107 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் 107, மகாராஷ்டிராவில் 31 வழக்குகள் அதிகம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

New Delhi:

நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை இன்று 107 ஐ எட்டியுள்ளது,  மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 31 எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். புதியதாக 14 பேர் இம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். கேரளாவில் 22 மற்றும் உத்தரப்பிரதேசம் 11 என பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளன. ஹரியானாவில் உள்ள 14 நோயாளிகளும் வெளிநாட்டினர். டெல்லியில் இதுவரை ஏழு நோயாளிகள் பதிவாகியுள்ளனர், அவற்றில் இரண்டு பேர் இறந்துவிட்டனர். நாட்டில் பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன, அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய ஊக்குவிக்கின்றன, சினிமா அரங்குகள் மூடப்பட்டுள்ளன மேலும் திருவிழாக்கள் மற்றும் மாநாடுகள் ரத்து செய்யப்படுகின்றன. நாடாளுமன்ற பார்வையாளர்களுக்குத் தடை விதித்துள்ளது.

  1. உலகெங்கிலும் 5,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கூட்டு செயல் திட்டத்தினை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று சார்க் நாடுகளுடன் வீடியோ மாநாட்டை நடத்த இருக்கின்றார். "நாங்கள் ஒன்றாக ,இனைவது பயனுள்ள விளைவுகளுக்கு வழிவகுக்கும்," என்று அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  2. கேரளாவின் கொச்சியில், துபாய் புறப்பட இருந்த எமிரேட்ஸ் விமானத்தில் 270 பயணிகள் மருத்துவ பரிசோதனைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அந்த விமானத்தில் ஒரு பிரிட்டிஷ் நாட்டவர் நாவல் கொரோனா வைரஸுக்கு சாதகமாகச் சோதனை உறுதி செய்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
  3.  இன்று, நடிகர் அமிதாப் பச்சன் தனது ரசிகர்களிடம் கொரோனா வைரஸ் பயம் காரணமாக ரசிகர்களுடனான வழக்கமான சந்திப்பினை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்
  4. டெல்லியில் கொரோன பாதிப்பு தொடர்பாக இரண்டு இறப்புகள் இந்தியாவில் பதிவாகியுள்ளன. இதில் இருவரும் வயதானவர்கள் என்று அரசு குறிப்பிட்டுள்ளது.
  5. கொரோனா தொற்று பரவலை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது, இதில் ஐ.நா மற்றும் இராஜதந்திர விசாக்கள் போன்ற சிலவற்றைத் தவிர்த்து - ஏப்ரல் 15 வரை விசாக்களை ரத்து செய்திருக்கின்றது. மேலும், 37 எல்லை சோதனைச் சாவடிகளில் 18 ஐ சர்வதேச போக்குவரத்திற்கு மூடுவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது
  6. மால்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் போன்ற பொது இடங்களை மூடுவது, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
  7. சனிக்கிழமையன்று, முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் பெங்களூரு அலுவலகத்தைத் தற்காலிகமாக மூடி, பின்னர் வளாகத்தைச் சுத்தப்படுத்தும்.
  8. COVID-19 பரலல் கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வுஹான் மாவட்டத்தில் ஒரு சந்தையில் தொடங்கியது. உலக சுகாதார நிறுவனம் இந்த பரவலை ஒரு தொற்றுநோயாக அறிவித்துள்ளது, இது உலகம் முழுவதும் பரவி ஏராளமான மக்களைப் பாதித்துள்ளது.
  9. நேற்று, உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் கூறுகையில், ஐரோப்பா இப்போது தொற்றுநோயின் மையமாக மாறியுள்ளது, சீனாவைத் தவிர, உலகின் பிற பகுதிகளிலும் அதிகமான தொற்று மற்றும் இறப்புகள் பதிவாகியுள்ளன.
  10. சீனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,021 ஆக பதிவாகியுள்ளன - அவற்றில் 18 புதியவை - 3194 பேர் இறந்துள்ளனர். சீனாவுக்கு வெளியே, 61,518 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,199 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

.