This Article is From Jun 30, 2020

இந்தியாவில் கொரோனா நிலவரம்: 5.66 லட்சம் பேர் பாதிப்பு, 16,893 பேர் உயிரிழப்பு!

Coronavirus Cases, India: இந்தியாவில் இதுவரை மொத்தமாக 3,34,822 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா நிலவரம்: 5.66 லட்சம் பேர் பாதிப்பு, 16,893 பேர் உயிரிழப்பு!

Coronavirus Cases, India: கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 16,893 பேர் உயிரிழந்துள்ளனர்

ஹைலைட்ஸ்

  • ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவு புதிதாக 18,522 பேர் பாதிப்பு
  • மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 5,66,840 ஆக அதிகரிப்பு
  • நேற்று ஒரு நாளில் மட்டும் 418 பேர் உயிரிழப்பு
New Delhi:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 18,522 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 5,66,840 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், நேற்று ஒரு நாளில் மட்டும் 418 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 16,893 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே, நேற்று ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு தளர்வு விதித்து அன்லாக் 2 குறித்த நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதில், கட்டுப்பட்டு மண்டலங்கள், பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு எந்த தளர்வுகளும் வழங்கப்படவில்லை.

இதனிடையே, இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள COVAXIN என்ற கொரோனாவுக்கு எதிரான முதல் தடுப்பு மருந்தை ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி பரிசோதனை மேற்கொள்ள இந்திய மருத்துவக் கட்டுப்பாட்டகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தடுப்பூசி SARS-CoV-2 வைரஸ் பரவல் சமயத்தில் உருவாக்கப்பட்டது. இதனை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. 

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்ட 3,34,822 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து, இந்தியாவில் குணமடைபவர்களின் எண்ணிக்கை விகிதம் அதிகரித்து வருகிறது. 

நாட்டில் பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிராவில், ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

தொடர்ந்து, 3வது நாளாக மகராஷ்டிரா மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கையானது 5,000ஐ தாண்டி பதிவாகி வருகிறது. இதைத்தொடர்ந்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1.69லட்சமாக உயர்ந்துள்ளது. இது சீனாவின் ஏற்பட்ட பாதிப்பை விட இருமடங்கு அதிகமாகும். 

இந்தியா முழுவதும் இதுவரை 86,08,654 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 2,10,292 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுளது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையானது 130 கோடியாகும். 

நாட்டில் பாதிப்பு அதிகமுள்ள 3வது மாநிலமாக உள்ள தமிழகமும் ஊரடங்கை ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல், சென்னை, மதுரையில் முழு ஊரடங்கு ஜூலை 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, அந்த மாவட்டங்களில் தற்போதுள்ள தளர்வுகளுடன் ஜூலை 31ம் தேதி ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக அங்கு 3949 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

.