This Article is From Jun 25, 2020

இந்த வருடம் நேரடி வகுப்புகள் கிடையாது; ஐஐடி மும்பை அறிவிப்பு!

தற்போதைய செமஸ்டரை எப்படி நிறைவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை உறுதியாக தீர்மானிப்பதில் இந்தியாவிலே முதலாவதாக முக்கிய முடிவை எடுத்துள்ளோம்.

இந்த வருடம் நேரடி வகுப்புகள் கிடையாது; ஐஐடி மும்பை அறிவிப்பு!

இந்த வருடம் நேரடி வகுப்புகள் கிடையாது; ஐஐடி மும்பை அறிவிப்பு!

Mumbai/ New Delhi:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த வருடம் நேரடி வகுப்புகள் கிடையாது என ஐஐடி மும்பை அறிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் எந்த சமரசமும் கிடையாது என்று தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக ஐஐடி மும்பை தலைமை பேராசிரியர் சுபாசிஸ் சவுத்ரி நேற்றிரவு தனது முகநூல் பதிவில் கூறியதாதவது, நீண்ட விவாதத்திற்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

ஐ.ஐ.டி மும்பையை பொறுத்தவரை, மாணவர்களுக்கே முதல் முன்னுரிமை. மாணவர்களுக்கு உதவும் வகையில் தற்போதைய செமஸ்டரை எப்படி நிறைவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை உறுதியாக தீர்மானிப்பதில் இந்தியாவிலே முதலாவதாக முக்கிய முடிவை எடுத்துள்ளோம்.

எனினும், தொற்றுநோயின் தற்போதைய நிலைமை காரணமாக, எங்கள் மாணவர்களுக்கு அடுத்த செமஸ்டரை எவ்வாறு திட்டமிடுவது? இதுதொடர்பாக மீண்டும் கலந்தாலோசனை மேற்கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் எந்த சமரசமும் ஏற்படாத வகையில், அடுத்த செமஸ்டரை ஆன்லைன் பயன்முறையிலே இயக்குவது என்று முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
 


இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான செமஸ்டர் வகுப்புகளை ஜூலை மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையில் "பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த" மாணவர்களுக்கு நிதி வழங்குவதற்கான வேண்டுகோளும் இருந்தது.

"எங்கள் மாணவர்களில் பெரும் பகுதியினர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களிலிருந்து வந்தவர்கள், இந்த ஆன்லைன் வகுப்புகளை எடுக்க மடிக்கணினிகள் மற்றும் பிராட்பேண்ட் இணைப்பு தேவைப்படும். அவர்களைச் மேம்படுத்துவதற்கு உதவிகள் தேவைப்படும்" என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அந்த ஏழை மாணவர்களுக்கு உதவ சுமார் ரூ.5 கோடி தேவைப்படும் என்று மதிப்பிட்டுள்ளோம். இந்த இளைஞர்கள் மேலும் தடைகள் அல்லது தாமதங்கள் இன்றி தங்கள் கற்றலைத் தொடர உதவுவதற்கு உங்கள் பெரும் ஆதரவை எதிர்பார்க்கிறோம் "என்று அவர், நன்கொடைகளுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்தியாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 4.56 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் அதிகமாக மகாராஷ்டிராவில் தான் 1.39 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் மட்டும் இதுவரை 70,000 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

.