அரசு பொறியாளர் மீது சேற்றை ஊற்றிய காங்கிரஸ் எம்.எல்.ஏ கைது!

சில நாட்களுக்கு முன்னர் பாஜக எம்.பி., ஆகாஷ் விஜய்வார்கியா, அரசு அதிகாரிகளை கிரிக்கெட் மட்டைக் கொண்டு அடித்து, சர்ச்சை ஏற்படுத்தினார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

ஆகாஷ் நடந்து கொண்ட விதத்திற்குக் கண்டனம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, “வரம்பு மீறி நடந்து கொள்பவர்கள் கட்சியிலிருந்து விலக்கப்பட வேண்டும்“ என்று எச்சரித்தார். 


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. மகாராஷ்டிரா மாநிலத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது
  2. சாலையை 'சோதனை' செய்ய எம்.எல்.ஏ சம்பவ இடத்துக்கு போனாராம்
  3. எம்.எல்.ஏ-வின் தந்தை நாராயண் ரானே, மன்னிப்பு கேட்டுள்ளார்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுப் பாலத்தை ஆய்வு செய்த அரசு பொறியாளர் மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ நிதிஷ் நாராயன் ரானே சேற்றை ஊற்றி பாலத்தில் கட்டி போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நிதிஷ் ரானே, அவராகவே அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்குச் சென்று சரண்டர் ஆனார்.

மும்பை அருகேயுள்ள கன்காவ்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதிஷ் நாராயன் ரானே. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-வான இவர் மறைந்த மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் நாராயண் ரானேவின் மகன் ஆவார். இந்நிலையில் கன்காவ்லி அருகே மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுப் பாலத்தை அரசு பொறியாளர பிரகாஷ் ஷேதேகர் ஆய்வு நடத்த வந்தார்.

இந்தத் தகவலை அறிந்த எம்.எல்.ஏ நிதீஷ் ரானே, தனது ஆதரவாளர்களுடன் சென்று அரசு பொறியாளரை தனது தொகுதியில் சாலைகள் சரியில்லை என முற்றுகையிட்டார். அப்போது எம்.எல்.ஏ மற்றும் பொறியாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதையடுத்து ஆத்திரம் அடைந்த எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆட்கள், பொறியாளர் மீது இரண்டு வாளி நிறைய சேற்றை ஊற்றியதுடன், அடித்து உதைத்து பாலத்தில் கட்டி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிதிஷ் ரானே, இதைப் போன்ற சம்பவத்தில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும் 2017 ஆம் ஆண்டு, அரசு அதிகாரி மீது கோபமடைந்து மீன் ஒன்றைத் தூக்கியடித்தார். தற்போது நடந்துள்ள சம்பவம் குறித்து நிதிஷ் ரானே, மன்னிப்பு கேட்கவில்லை. ஆனால், அவரது தந்தையான நாராயண் ரானே, “நிதிஷின் நடத்தைத் தவறானது. சாலை குறித்து அவர் போராட்டம் செய்தது சரிதான். ஆனால், அவர் அதைச் செய்த விதம் தவறு. வன்முறையை அவர் கையிலெடுத்திருக்கக் கூடாது. நான் அதற்கு ஆதரவு தரமாட்டேன்” என்று கூறியுள்ளார். 

தொடர்ந்து ‘நீங்கள் நிதிஷை மன்னிப்பு கேட்க சொல்வீர்களா?' என்று கேட்டதற்கு, “செய்யாத ஒரு தவறுக்கு நானே மன்னிப்பு கேட்கும்போது, செய்த தவறுக்கு அவர் மன்னிப்பு கேட்கத்தான் வேண்டும்” என்று கூறினார். 

சில நாட்களுக்கு முன்னர் பாஜக எம்.பி., ஆகாஷ் விஜய்வார்கியா, அரசு அதிகாரிகளை கிரிக்கெட் மட்டைக் கொண்டு அடித்து, சர்ச்சை ஏற்படுத்தினார். அது அடங்குவதற்குள் இன்னொரு சர்ச்சை வெடித்துள்ளது. 

ஆகாஷ் நடந்து கொண்ட விதத்திற்குக் கண்டனம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, “வரம்பு மீறி நடந்து கொள்பவர்கள் கட்சியிலிருந்து விலக்கப்பட வேண்டும்“ என்று எச்சரித்தார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................