குலாம் நபி ஆசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய ராகுல், சோனியா!

தலைமை தொடர்பாக கடிதம் எழுதியவர்களுக்கு பாஜகவுடன் கூட்டு உள்ளதாக தான் கூறவில்லை என்று கபில் சிபிலிடமும், குலாம் நபி ஆசாத்திடமும் ராகுல் தெளிவுபடுத்தியுள்ளார்

குலாம் நபி ஆசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய ராகுல், சோனியா!

குலாம் நபி ஆசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய ராகுல், சோனியா!

New Delhi:

காங்கிரஸ் தலைமை குறித்து கடிதம் எழுதியவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத்தை, கட்சி செயற்குழு கூட்டத்தில் பலரும் விமர்சித்த நிலையில், அன்றைய தினமே, சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். 

திங்கட்கிழமையன்று சுமார் ஏழு மணி நேரம் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பலர் குலாம் நபி ஆசாத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ கடுமையாக சாடினர். இதைத்தொடர்ந்து, ஆசாத்துடன் பேசிய சோனியா காந்தி அவரது குறைகள் தீர்த்து வைக்கப்படும் என்று அவருக்கு உறுதியளித்துள்ளார். 

இதேபோல், தலைமை தொடர்பாக கடிதம் எழுதியவர்களுக்கு பாஜகவுடன் கூட்டு உள்ளதாக தான் கூறவில்லை என்று கபில் சிபிலிடமும், குலாம் நபி ஆசாத்திடமும் ராகுல் தெளிவுபடுத்தியுள்ளார். 

தொடர்ந்து, மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் அம்பிகா சோனி ஆகியோர் ஆசாத் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. கூட்டதில் ஆசாத் பேச வரும் போது, தீய எண்ணம் கொண்டவர்களை பேச அனுமதிக்கக்கூடாது என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார். தொடர்ந்து, கூறுக்கிட்ட சோனியா அவரை கண்டித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, பேசிய குலாம் நபி ஆசாத், கடிதம் எழுதியவர்கள் பாஜகவுடன் கூட்டு வைத்துள்ளது நிரூபிக்கப்பட்டால், கட்சியில் இருந்து தான் ராஜினாமா செய்வதாக கூறினார்.

தொடர்ந்து, இதுதொடர்பாக ஆசாத் தனது ட்விட்டர் பதிவில், ஊடகங்கள் தவறான தகவல்களை தெரிவிக்கின்றன. செயற்குழு கூட்டத்திலோ அல்லது வெளியேவோ, இந்த கடிதத்தை எழுதியவர்களுக்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பதை நிரூபிக்க கோரி நான் ராகுல் காந்தியிடம் கூறியுள்ளேன். 

காந்தி குடும்பத்தின் தலைமை குறித்து விமர்சிப்பது எங்களது நோக்கமில்லை என அந்த கடிதத்தை எழுதிய மேலும் இரண்டு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.