This Article is From Jul 16, 2018

‘நோயுற்ற மனநிலை..!’- பிரதமர் மோடியை துளைத்தெடுத்த காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்களுக்கு முன்னர், ‘காங்கிரஸ் முஸ்லீம்களுக்கான கட்சி மட்டும் தானா?’ என்று கேள்வி எழுப்பினார்

‘நோயுற்ற மனநிலை..!’- பிரதமர் மோடியை துளைத்தெடுத்த காங்கிரஸ்

ஹைலைட்ஸ்

  • உ.பி-யில் நடந்த நிகழ்ச்சியில் இந்தக் கருத்தை கூறியுள்ளார் பிரதமர்
  • வரலாறு குறித்து மோடிக்குத் தெரியவில்லை, காங்கிரஸ்
  • அவருடைய பதவிக்கான மாண்பை இழக்கச் செய்கிறார் மோடி, காங்கிரஸ்
New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்களுக்கு முன்னர், ‘காங்கிரஸ் முஸ்லீம்களுக்கான கட்சி மட்டும் தானா?’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு காங்கிரஸிடமிருந்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ள அசாம்கர் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் பேசிய பிரதமர் மோடி, ‘காங்கிரஸ், முஸ்லீம் மக்களின் கட்சியாக மட்டுமே இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் எரிர்கட்சிகள் முத்தலாக் சட்டத்தை ஏன் எதிக்கின்றன. பெண்களின் பாதுக்காப்புக்காக, குறிப்பாக முஸ்லீம் பெண்களின் பாதுகாப்புக்காக அரசு சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஏன் காங்கிரஸ் முடக்கப் பார்கிறது’ என்று பேசினார். இதற்கு எதிர்கட்சிகள் தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இந்நிலையில் பிரதமரின் விமர்சனம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் ஷர்மா, ‘பிரதமர், அவரின் பதவிக்கான மாண்புக்குத் தொடர்ந்து கலங்கம் விளைவித்து வருகிறார். அவர் காங்கிரஸ் குறித்து சொன்ன கூற்றுகளுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். இது அவரின் மனநிலை எவ்வளவு நோயுற்றிருக்கிறது என்பதையும் குழம்பியுள்ளது என்பதையும் எடுத்துக் கூறுகிறது. அவரின் இந்த நோயுற்ற மனநிலை நம் தேசத்துக்கே கவலை அளிக்கக் கூடியவை. வரலாற்றில் இல்லாத தகவல்களை தரவுகளையும் பிரதமர் சொல்லி வருகிறார். பொய்களின் மொத்த உருவமாக அவர் மாறியுள்ளார். வரலாறு குறித்த அறிவும் அவருக்கு இருப்பதாக தெரியவில்லை. பொய்யான விஷயங்களை அவர், வரலாற்றுச் செய்திகளாக கூறி வருகிறார். காங்கிரஸ் இந்தியர்கள் அனைவருக்குமான கட்சி. நாட்டின் பன்முகத்தன்மையை ஏற்று மதிக்கும் கட்சி’ என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், ‘ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கழித்தும் மோடி, இந்து - முஸ்லீம் குறித்து பேசிக் கொண்டிருந்தால், அவர் இந்த காலகட்டத்தில் எதுவுமே செய்யவில்லை என்று தான் அர்த்தம். இப்படி, இந்து - முஸ்லீம் குறித்து பேசுவதால் இந்தியா நம்பர் 1 நாடாக ஆகிவிடுமா?’ என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

.